திங்கள், 30 டிசம்பர், 2013

யுத்த பாதிப்புக்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்க­ளத்தின் கணக்கெடுப்பினை முஸ்லிம் காங்கிரஸ் முற்றாக எதிர்க்கின்றது-





யுத்த பாதிப் புக்கள் தொடர்பில் புள் ளி வி ப ர வியல் திணைக் க­ளத்தின் கணக் கெ டுப் பினை முஸ்லிம் காங் கிரஸ் முற் றாக எதிர்க் கின் றது. கணக் கெ டுப்பில் எந் த வொரு உண்மைத் தன்­மை யு மில்லை என முஸ்லிம் காங் கிரஸ் கட் சியின் செய லா­ளரும் பாரா ளு மன்ற உறுப் பி ன ரு மான ஹசன் அலி தெரி வித்­துள்ளார்.
இது தொடர் பாக அவர் மேலும் கருத்துத் தெரி விக் கையில்,

கடந்த முப் பது வருட கால கொடிய யுத் தத்தில் ஏற் பட்ட உயி­ரி ழப் புகள், பாதிக் கப் பட் ட வர்கள், சொத்து சேதங்கள் தொடர்பில் புள் ளி வி ப ர வியல் திணைக் க ளத்தின் கணக் கெ­டுப்பில் எவ் வி த மான திருப்தியுமில்லை.

இவை தொடர்பில் மக்கள் அதி க ள வி லான முறைப் பா டு களை முன் வைத் துள் ளனர். யுத்த பாதிப்­புக்கள் தொடர்பில் கணக் கெ டுப் பொன்று அவ சி ய மா னதே. அதை அர சாங்கம் கட் டா ய மாக செய்ய வேண்டும். ஆனால் தற் போது புள் ளி வி ப ர வியல் திணைக் க ளத்தின் கணக் கெ டுப்பில் எவ் வி த மான வெளிப் ப டை யான தன் மை க ளு மில்லை.

கணக் கெ டுப்பு தொடர்பில் கொடுக் கப் படும் பத் தி ரத் தினை புள்ளி விப ர வியல் திணைக் கள அதி கா­ரி களே நிரப் பு வ தா கவும் பொது மக் களின் உண்மை விப ரங் களை கருத்தில் கொள்வதில்லை எனவும் அதிக முறைப் பா டுகள் கிடைக்கப் பெற் றுள் ளன.

அதேபோல் இவ் புள் ளி வி ப ர வியல் கணக் கெ டுப் பினை எவ ரது தனிப் பட்ட தேவை க ளுக் கா கவோ அல் லது சர் வ தே சத்தின் அழுத் தங் களை சமா ளிக்கும் நோக்கில் மேற் கொள் ளப் ப டு கின் றதா என்ற சந் தே கமும் எமக் குள் ளது.

எவ் வித உண்மைத் தன் மை க ளு மில் லாத ஒரு செயற் பா டு க ளுக்கு ஆத ரவு தெரி வித்து மக் களை ஏமாற்ற நாம் விரும் ப வில்லை. இவ் மூடு மந் தி ரத்தின் பின் ன ணி யினை அர சாங்கம் உட ன டி யாக நிவர்த்தி செய்ய வேண்டும். இல் லையேல் வேறு வேறு பிரச் சி னை க ளுக்கு முகம் கொடுக்க வேண் டிய நிலை ஏற் ப டக் கூடும்.

மேலும் அர சாங் கத்தில் இருக்கும் ஒரு சில பௌத்த பேரி ன வா தி களின் செயற் பா டு களின் கார­ணத் தி னா லேயே சிறு பான்மை மக்கள் விரக் தி ய டைந் துள் ளனர். சிறு பான்மை மக் க ளையும் சேர்த்து பாதுகாக்க வேண் டு மென் பதன் கார ணத் தி னா லேயே மக்கள் அர சாங் கத் தினை தெரிவு செய் கின் றனர். ஆனால் அதைப் புரிந்து கொள் ளாத அர சாங் கத் தினர் தொடர்ந்தும் சிறு பான்மை மக் களை துன் பு றுத்தி வரு கின் றனர்.

நாட்டில் சிங் கள மக் களின் மனதில் பிரி வினைவாதமோ சிறு பான்மை மக்கள் மீதான தனிப் பட்ட விரோ தங் களோ இல்லை. நாட்டில் மூவின மக் களும் ஒற் று மை யாக வாழவே விரும் பு கின் றனர். ஆனால் ஒரு சில பெருத்த தலை மை களின் அர சியல் இலா பத்தின் கார ண மா கவே நாட்டில் பிரி­வி னை வா தத் தினை தூண்டி நாட்டில் குழப் ப கரமான சூழ லினை ஏற் ப டுத் து கின் றனர்.

சிங் க ள வர் களை அடக்கி சிறு பான் மை யினர் ஆட்சி நடத்த முடி யாது என் ப தனை தெரிந்து கொண்டும் தமிழர் முஸ் லிம் களை நோக டிப் ப தா னது மனித உரிமை மீறல் க ளா கவே கரு தப் பட வேண்டும்.

கொழுத்த பூனை எலி யுடன் விளை யாடி எலியை துன் பு றுத் து வதைப் போல் பெரும் பான் மை யான மக்கள் சகல உரி மை க ளையும் சுதந் தி ரத் தி னையும் அனு ப விக்கும் அரசியல் சூழல் ஏற்பட்டிருந்தும் சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்த்து இன்பம் காணும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

மேலும் வடக்கு கிழக்கினை ஒன்றிணைத்து தனி இராச்சியத்தினை அமைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஒரு சிலரின் பிரிவினைப் பேச்சுக்களை கேட்டு ஜனாதிபதி சிறுபான்மை மக்களை நிராகரித்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!





அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது பதவியை இராஜினாமா செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமானபொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 



இது தொடர்பில் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன். 


இந்த நிலையில் பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும், சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருகின்றனர் எனவே இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். எனினும் கட்சியோ மக்களோ நான் மீண்டும் தவிசாளராக கடமையாற்றுமாறு தீர்மானித்தால் கடமையாற்றவும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

ரயிலில் தீ: தப்பிக்க முயன்றவர்களில் மூவர் பலி; பலர் காயம்






மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களில்,  கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் இலங்கை வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் தற்சமயம் அறியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Views: 1131

வியாழன், 26 டிசம்பர், 2013

சுனாமிக்கு வயது ஒன்பது




ஆழிப் பேரலை சுனாமியாகப் பெயரெடுத்து உயிர்களைக் காவு கொண்டு இன்றுடன் 09 ஆண்டுகளை அடைந்துள்ளோம்.

எம்மோடு அன்றும் ஞாயிறு விடுமுறையில் துயில் விட்டெழுந்த எம் சொந்தங்கள் பலரை இழந்து இன்று கண்ணீர் மல்கின்றோம். மக்களின் மனங்களில் மறக்க முடியா நினைவுகளில் இதுவும் ஒன்று.....

அவர்களின் மறுமை வாழ்வுக்காக தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்திப்போம்.



பிரதேசவாதத்தை தூண்டும் ஷிராஸுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கல்முனை பொது அமைப்புக்கள்




கல்முனையை இனவாதிகளுடன் சேர்ந்து கூறுபோட முன்னால் மேயர் ஷிராஸ் துவேச வார்த்தைகளால்  பிரதேசவாதத்தை தூண்டும் விதத்தில் கல்முனை மக்களிடத்தில்  கோசம் எழுப்பியதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதவது,,,

மாநகர சபை வளாகத்தினுள் இடம் பெற்ற இவ் அசம்பாவிதமானது சிராஸின் பழி தீர்க்கும் நடவடிக்கையாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும் கல்முனை பிரதேச வாழ் மக்களால் உற்று நோக்கப்படுகின்றது.
கேவலம் பதவிக்காக தான் கொடுத்த வாக்கை கூட மீறிய அவர் சுயநல அரசியலுக்காக பிரதேசவாதத்தை தூண்டி பின்னர் தனது மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார் அதுவும் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமென்ற நோக்கமே தவிர மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை.
தற்போதைய நிலையில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்கட்சியுடனும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பச்சோந்திகள் சிலருடனும் சேர்ந்து அத்திட்டத்தை தோக்கடித்து முதல்வர் நிசாம் காரியப்பரை பதவியில் இருந்து தூக்குவதற்கு செய்த சூழ்ச்சியே இதுவாகும்.
இந்த வரவு செலவு திட்டம் தோக்கடிக்கப்படுமானால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம் என்ற கீழ்த்தரமான நோக்கமே தவிர வேறில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இது பெரும் சவால் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடருமாக இருந்தால் நயவஞ்சக சிராஸை  கட்சியில் இருந்து முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பது கல்முனை வாழ் மக்களின் வினயமான வேண்டு கோளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இவ்விடயத்தில் தலையிட்டு வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விட்டு அதை நடை முறைப்படுத்தவேண்டும் என்றும் பிரதேச வாழ் பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள்,கல்முனை வர்த்தக சம்மேளனம் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் மீன்பிடி வாடியும், டிப்பர் லொறியும் தீக்கிரை





சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன் வாடியொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேற்று (25) நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மீன் வாடிக்கு சொந்தக்காரரான பீ.எம்.அலியார் (றாசிக்) சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தீச் சம்பவத்தினால் மீன் வாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் டிப்பர் வாகனம் அந்த தீக்குள் தள்ளியும் விடப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மீன்வாடியினுள் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகின் இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 


செவ்வாய், 24 டிசம்பர், 2013

மதுபான கடைகளை நாளை மூடுமாறு உத்தரவு!





கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை மதுபான கடை கள் மூடப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சகல மது பான கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப் படுகிறது. கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத் திற்கு மதிப்பளிக்காது கடைகளை திறக்கும் மதுபான கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இவ்வாறு கடைகளை திறக்கும் நபர்களை கைது செய்ய விசேட தேடுதல் வேட்டை நடத்தப்பட உள்ளது.

ஏகே-47 ன் தந்தை மரணம்!





ஏகே-47ன் தந்தை என அழைக்கப்பபடும் மிக்கைல் கலஸ்னி க்கோவ் தனது 94 ஆவது வயதில் காலமானார். ஏகே- 47 ரக துப்பாக்கியை இரண்டாம் உலக யுத்த காலத்தில் வடிவ மைக்கத் தொடங்கி அதில் வெற்றி கண்டார். எனினும், தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல், 'எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, மிகவும் வருத்தமாக உள்ளது' என கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது.

மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். மிக்கைல் கலாசுனி க்கோவால் ஏ.கே-47 தானியங்கி துப்பாக்கி, 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி என இரு வகையாக உருவாக்கப்பட்டது.

ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏ.கே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிகள் 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத் தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத் துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலக ளவில் அதிகமாகப் பயன்படுத் தப்படும் துப்பாக்கியும் இதுவேயாகும். இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்ற பின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த துப்பாக்கியில் தோட்டாப்பெட்டி வெற்றாக இருக்கும் போது அதன் எடை 4.3 கிலோ கிராமாக இருக்கும். நிலையான மரப்பிடியுடன் கூடிய ஏகே-47 துப்பாக்கியின் நீளம் 870 மிமீ (34.3 அங்குலம்) ஆகும். விரிமடிப்புப் பிடியுடன் அதன் நீளம் 875 மிமீ ஆகும்.(34.4 அங்குலம்) மடிப்பு பிடியுடன் அதன் நீளம் 645 மிமீ (25.5 அங்குலம்) ஆகும். இந்த துப்பாக்கியின் சுடு குழல் 415 மிமீ (16.3 அங்குலம்) நீளமானதாம்.

இந்த துப்பாக்கிகளுக்கு 7.62ஒ39 மிமீ (ஆ43) தோட்டாக்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து தோட்டாக்களை நிரப்பாத நிலையில் அடுத்தடுத்து சுடவல்ல 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல மற்றும் ஒத்தியலக்கூடிய 40- சுற்றுப் பெட்டி அல்லது 75-சுற்றுகள் வெடிமருந்துப் பெட்டி,ஆர் பி கே பயன்படுத்தலாம்.

பிரதி முதல்வராக சிராஸ் மீராசாகிப்







கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (23.12.2013) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிதி முதல்வருக்கான அலுவலக அறையில் ஒரு  மேசையும் கதிரையும் காணப்பட்டது. பிரதி முதல்வரை சந்திப்பதற்காக வருபவர்கள் அமருவதற்கு கதிரைகள் இல்லாமல் இருந்தது. இதனால் வருகைதந்த  பொதுமக்கள் மற்றும் கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தனர்.

அத்தோடு “பிரதி முதல்வர்” என்ற பெயர்ப்பலகை அவ்வறைக்கு  வெளியில் பொருத்தப்படாமல் அவ்வறையின் மூலை ஒன்றில் கணப்பட்டது. அதுமாத்திரமன்றி அலுவலக பணிக்கான கனணி, கனணி  மேசை மற்றும் கதிரை, பிரின்டர், ஸ்கேனர் போன்ற பல  பொருட்களை அங்கு காணப்படவில்லை. பிரதி முதல்வருக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது முதல்வரின் அறிக்கையாக மாத்திரமே காணப்பட்டது.

“கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருக்கான வசதி வாய்ப்புக்களில் மாநகர சபையின் முதல்வர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது அபாண்டமானதாகும் எனவும் கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வருக்குரிய சகல வசதிகளும் வழங்கப்பட்டும்  அதனை இன்னும் உத்தியோகபூர்வமாக வந்து பொறுப்பெடுக்காமல் என் மீது வீண் பழி சுமத்தி ஊடகங்களுக்கு செய்தி வழங்கும் செயலானது அநாகரிகமானதாகும் எனவும் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கவலை தெரிவித்துள்ளதாக” செய்திகள் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வர் பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் மாநகர ஊழியர்களை சந்தித்து அவர்கள் தான் முதல்வராக செயற்பட்ட காலப்பகுதியில் உதவி ஒத்தாசை புரிந்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து கைலாகு கொடுத்தார்.




x

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

நற்பிட்டிமுனை பளீல் மகன் முஹமட் நிஹாத் மருத்துவத் துறைக்கு தெரிவு !!






unnamed (76)நேற்று முன்தினம் வெளியாகிய க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் தோற்றிய கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி மாணவன் முஹமட் பளீல் முஹமட் நிஹாத் A ,2 B  சித்திபெற்று அம்பாறை மாவட்டத்தில் 21ஆவது இடத்தினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.
கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த இம்மாணவன் மர்ஹும் பளீல் ,இப்ராஹீம் ஆயிஷா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வராவார்.
இம்மாணவனின் தந்தையார் மர்ஹும் ஆதம்லெப்பை முஹமட் பளீல் முன்னாள் காத்தான்குடி பிரதேச செயலாளரும், ஊடகவியலாளரும் சிறந்த எழுத்தாளருமாவார்.

சனி, 21 டிசம்பர், 2013

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து தீர்மானிக்கவில்லை: ஜோன்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேச செயலகம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

க.பொ.த.சாதாரண பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்





நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினர் தங்களுடைய விசனத்தை தெரிவித்துள்ளனர்.

க.பொ.த. (சா/த) பரீட்சையின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான பரீட்சை நடைபெற்றது.  இந்த பரீட்சையில் பகுதி-II லேயே மேற்படி கேள்வி இடம்பெற்றுள்ளது.

வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்களில் ஐந்து வினாக்களுக்கு பரீட்சார்த்திகள் விடையளிக்க வேண்டும். அதில் முதலாவது வினா கட்டாயமானதாகும். அந்த முதலாவது வினாவில் மூன்றாவது பகுதி வினாவாகவே இந்த வினா உள்ளடக்கப்பட்டுள்ளது.

"இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?" என்றே அந்த வினாவில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்பிலேயே முஸ்லிம் சமூகத்தினர் விசனம் வெளியிட்டுள்ளர்.

இந்த கேள்வியின் ஊடாக மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய சட்ட மூலாதாரம் தொடர்பான பிழையான பார்வை உள்வாங்கப்படுகின்றது எனவும் முஸ்லிம் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து கல்வியமைச்சரின் கவனத்திற்கும் உரிய தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரவிருப்பதாக முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெஹிவள பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றில் ஹரீஸ் எம்.பி வேண்டுகோள்






தெஹிவள, கடவத்த பள்ளிவாசல்கள் நள்ளிரவு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டத்தின் பொதுநிர்வாக அமைச்சின் குழு நிலை விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டிலுள்ள மூவின மக்களும் யுத்தத்திற்கு பின்னராக சூழ்நிலையில் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்ற நிலையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையிட்டு அரசாங்கம் கூடுதல் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரினதும் அமைச்சர்களினதும் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் தொடர்தேச்சியாக நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதனால் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளதுடன் ஆவேசத்துடனும் உள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பள்ளிவாசல் மீதான தாக்குதலினை மக்கள் பிரதிநிதிகளான எங்களால் இனிமேலும் பார்;த்துக் கொண்டிருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உரத்த தொனியில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதற்கு அரசாங்கம் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மூடி, தமிழ் முஸ்லிம் நிரந்தர ஒற்றுமைக்கு வழிவகுக்குக – அ.இ.மு.கா. செயலாளர் நாயகம் ஹமீட் வேண்டுகோள்

                                                                              
முஸ்லிம்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எதிர்க்கவில்லை. மாறாக முஸ்லிம்களின் பிரதேச செயலக எல்லையையும் தாம் பறித்துக்கொள்ள முற்படுவதையே எதிர்க்கின்றார்கள் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் இதுவிடயமாக குறிப்பிடும்போது,

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்படுவது தொடர்பான கோரிக்கை நியாயமானது போன்றும் அதனால் முஸ்லிம்களுக்கு எதுவிதமான பாதிப்பும் இல்லை என்பது போலவும் ஏதோ முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவே முட்டுக்கட்டை போடுவதாகவும் சில தமிழ் அரசியல்வாதிகள் காட்ட முற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் வழங்குவதை முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவ்வாறு எதிர்ப்பதாக கூறுவது உண்மைக்கு முரணானதாகும். 

இங்கு இருக்கின்ற பிரச்சினை இந்நாட்டு முஸ்லிம்களின் தலை நகரமாக தென்கிழக்கின் முக வெற்றிலையாக கருதப்படுகின்ற முஸ்லிம்களின் முழு வர்த்தகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற கல்முனை நகரத்தை உள்வாங்கியதான ஒரு பிரதேச செயலகத்தை தமிழ் தரப்பு கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள், என்ற உண்மையை தமிழ் தரப்பினர் ஜீரணித்தாக வேண்டும். அவ்வாறான ஒரு பிரதேச செயலகம் வழங்கப்படுகின்றபொழுது கல்முனை முஸ்லிம் பிரிவிற்கான பிரதேச செயலகமும் கல்முனை தமிழ் பிரதேச செயலக எல்லைப் பிரிவிற்குள் வருமென்றால் அதனுடைய பொருள் முஸ்லிம்களுக்கான பிரதேச செயலகத்தையும் உள்வாங்கியதான ஒரு பிரதேச செயலகப் பிரிவை தமிழ் தரப்பினர் கோருகின்றார்கள், என்பதாகும். அது எந்த வகையில் நியாயமானது என்று வினவ விரும்புகின்றோம்?

'முஸ்லிம் செயலகப் பிரிவிற்குள் தமிழ் மக்கள் வாழ முடியுமென்றால், தமிழ் செயலகப் பிரிவவிற்குள் ஏன் முஸ்லிம்கள் வாழ முடியாது' என்று ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அவருடைய கூற்று சரியாயின் காலாகாலமாக இருந்து வருகின்ற கல்முனைப் பிரதேச செயலகத்தைப் பிரித்து தமிழர்களுக்குக்காக ஒரு தமிழ் பிரதேச செயலகம் கேட்க வேண்டிய நியாயம் என்ன? தலைமுறை தலைமுறையாக இருந்து வந்ததுபோல் எந்தப் பிரிவினையும் இல்லாமல் முஸ்லிம்களும் தமிழர்களும் ஏன் ஒற்றுமையாக வாழ முடியாது? மாறாக முஸ்லிம்களுடன் இணைந்து வாழ முடியாது, என்பதனால் தங்களுக்கென்று பிரதேச செயலக கோரிக்கை விடுப்பது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம்களின் பிரதான வர்த்தக கேந்திர நகரத்தையும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் காணிகளையும் உள்வாங்கியதாக பிரதேச செயலகத்தைப் பிரித்து ஏன் கேட்கவேண்டும்? 

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் பிட்டும் தேங்காயும் போல் மாறி மாறி அமையப் பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் இனரீதியாக தமிழ் பிரதேச செயலகம் கேட்பதற்கு இனவாதத்தைத் தவிர வேறு எதனைக் காரணமாகக் கூறமுடியும்.

சுமார் 45 ஆயிரம் முஸ்லிம்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவு இருக்கின்ற அதேவேளை 25 ஆயிரம் தமிழர்கள் கொண்ட பிரதேசத்திற்கும் 29 கிராம சேவகர் பிரிவுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது? திட்டமிட்டு தமிழ் பிரதேச செயலகப்பிரிவு கேட்பதற்காக உரித்தான பிரிவுகளை விடவும் அதிகமான பிரிவுகள் உருவாக்கப்பட்டதா? 

1990ம் ஆண்டிலிருந்து உப அலுவலகம் இயங்கி வருவதாகவும் அதனைத் தரமுயர்த்துவதற்காகவே கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் இதை முஸ்லிம்கள் எதிர்ப்பது நியாயமற்றது என்பதுபோலவும் காட்ட முற்படுகின்றார்கள். 

இவ் உப பிரதேச செயலகம் உருவான பின்னணியை சற்று ஆராய வேண்டும். 1989, 90 ஆம் ஆண்டுகள் முஸ்லிம்களின் அபிலாசைகளை கருத்தில் கொள்ளாமல் வடக்கு கிழக்கை இணைத்து கிழக்கில் 3 இல் ஒரு பங்காக இருந்த முஸ்லிம்களை 17 வீதமாகக் குறைத்து மாகாண அரசியலில் செல்லாக்காசான சமூகமாக மாற்றி ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக் குழுக்கள் வட கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்த காலமது.

இந்தியப்படை இருக்கத்தக்கதாக ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் முஸ்லிம்களை சல்லடை போட்ட காலமது. இவ்வாறு தாம் ஆளுகின்றவர்களாகவும், முஸ்லிம்கள் ஆளப்படுகின்றவர்களாகவும் உருவாக்கிய சூழ்நிலைக்கு மத்தியில் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவை என்ற ஒரே காரணத்திற்காக ஆளுகின்றவர்கள் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அலகுக்குள் இருப்பது ஆளப்படுவதற்கு சமமாகும், என்ற ஒரேயொரு காரணமே நிந்தவூரிலிருந்து காரைதீவு பிரதேச செயலகமும், கல்முனை தமிழ் பிரிவு உப பிரதேச செயலகமும் உருவாகுவதற்குக் காரணமாகும். 

காரைதீவு பிரதேச செயலகம் உருவாகுவதற்கு வேறு எதுவித அடிப்படைக் காரணங்களும் இருக்க முடியாது. தூரம் என்று கூட காரணம் கூறமுடியாது. ஏனெனில் காரைதீவுக்கும் நிந்தவூருக்கும் இடைப்பட்ட தூரம் பூச்சியமாகும். அவ்வாறு காரைதீவு பிரதேச செயலகம் பிரிக்கப்பட்ட பொழுது காரைதீவிலிருந்து தனிப் பிரதேச செயலகம் உருவாகுவதற்கு காரைதீவிலிருந்த சனத்தொகை போதாதென்று அருகிலிருந்த மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் கிராமங்கள் அதற்குள் உள்வாங்கப்பட்டன. அவர்களின் பரிபாஷையில் கூறுவதானால் ஆளப்படுகின்ற கிராமங்களாக அவைகள் உள்வாங்கப்பட்டன. இருப்பினும் இரு கிராமங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் அதனை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில் இவ்விரண்டு கிராமங்களையும் பொறுத்தவரையில் காரைதீவு தான் மிக அருகாமையிலுள்ள கிராமமாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இனவாத ரீதியாக அவர்கள் சிந்திக்கவில்லை. 

அதேநேரம் இப்பிரதேச செயலகங்கள் உருவாகுவதற்கு சற்று முன்பதாக அன்றைய பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரங்க நாயகி பத்மநாதன் அக்கரைப்பற்றிலிருந்து தமிழர்களுக்காக ஆலயடிவேம்பைப் பிரித்தெடுத்தார். அங்கும் இனவாதத்தைத் தவிர தூரம் சம்மந்தப்பட்ட பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினையோ இருக்கவில்லை. இதே அடிப்படையில்தான் கல்முனை தமிழ் பிரதேச உப செயலகமும் உருவாக்கப்பட்டு அதுவும் கல்முனை நகரத்திலேயே அமைக்கப்பட்டது. இரண்டு பிரதேச செயலகங்களுக்கும் இடைப்பட்ட தூரங்கள் 300 மீட்டர்கள் கூட இல்லை. மறைந்த தவைர் எம்.எச்.எம். அஷ்ரஃபோ அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளோ அக்கரைப்பற்றிலிருந்து ஆலையடிவேம்பு பிரிந்ததையோ, காரைதீவு பிரிந்ததையோ அல்லது தமிழ் உப பிரதேச செயலகம் உருவானதையோ ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கல்முனை உப பிரதேச செயலகம், பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதை அவர்கள் ஆட்சேபிப்பதற்கான காரணம் எல்லை வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றது என்பதனாலாகும். அதேநேரம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் எல்லை பாண்டிருப்பாகவோ அல்லது பாண்டிருப்பும் சேனைக்குடியிருப்பும் மாத்திரமாகவோ இருக்குமாக இருந்தால் யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.

இனவாத அடிப்டையைத் தவிர வேறு எந்த அடிப்டையும் இல்லாமல் தமிழ் பிரதேச செயலகமும் வேண்டும் அதற்குள் முஸ்லிம்கள் தம் இதயமாகப் போற்றுகின்ற முஸ்லிம்களின் மாபெரும் வர்த்தக நகரமான கல்முனை நகரமும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற தமிழ் தரப்பினரது கோரிக்கைதான் இப்பிரதேச செயலகத்தை ஆட்சேபிப்பதற்கான அடிப்படைக் காரணமாகும் என்பதையும் விசயம் புரியாமல் அறிக்கை விடுகின்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதேநேரம் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சம்மாந்துறையிலிருந்து பிரித்து நாவிதன்வெளி பிரதேச செயலகமும், பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன. அவற்றின் ஆட்புல எல்லைக்குள் மத்திய முகாம், நாலாம் கொலனி போன்ற சுமார் 4500 முஸ்லிம் வாக்குகள் கொண்ட பல முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு மேற்குறிப்பிட்ட முஸ்லிம் கிராமங்களிலிருந்து சென்ற முஸ்லிம்கள் பல உயிராபத்துக்கைளைக ;கூட சந்தித்திருக்கின்றார்கள். இருந்தபோதிலும் அவர்கள் நாவிதன்வெளியுடன் இணைந்திருப்பதை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில் சம்மாந்துறையை விடவும் நாவிதன்வெளி அவர்களைப் பொறுத்தவரையில் தூரம் குறைந்ததாகும். எனவே முஸ்லிம்கள் எந்தக் கட்டத்திலும் இனவாத ரீதியாக சிந்திக்காமல் இருக்கின்ற பொழுது கல்முனையில் அருகருகே இரண்டு பிரதேச செயலகங்களை அமைத்து எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற ஒரு கோரிக்கையினை முன்வைத்துவிட்டு முஸ்லிம்களைக் குறை சொல்வதற்கு எந்த விதத்தில் இவர்களின் மனச்சாட்சி இடம்கொடுக்கின்றது, என்று புரியவில்லை.

முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றுதான் அன்றும் விரும்பினார்கள், இன்றும் விரும்புகின்றார்கள். இணைந்து வாழ்வதற்காக சேர்ந்து போராட வந்த முஸ்லிம்களை சுட்டுக்கொன்றார்கள். சேர்ந்து வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். மீண்டும் வாழ வருகின்றபொழுது தடைக்கற்களை இடுகின்றார்கள். யுத்தம் நடைபெற்ற காலமெல்லாம் முஸ்லிம்களை சுட்டுக்கொன்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காலத்தில் கையகப்படுத்திய சுமார் 15 ஆயிரம் ஏக்கர் வயற்காணிகளை இன்னும் கையளிக்காமல் தாங்களே பயிர்செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இருக்கின்ற அதிசயம்தான் இலங்கையில் சிறுபான்மைகளை எதிரிகளாக நோக்குகின்ற, நாளாந்தம் முஸ்லிம்களதும், தமிழர்களதும், கிறிஸ்தவர்களதும் உள்ளங்களைப் புண்படுத்திக் கொண்டிருக்கின்ற பொதுபல சேனா கல்முனையிலுள்ள சில தமிழர்களுக்கு மாத்திரம் நண்பர்களாகும். மறுவார்த்தையில் கூறினால் முழு தமிழ் சமூகமும் பொதுபல சேனாவின் எதிரியாகும். ஆனால் கல்முனையிலுள்ள சில தமிழ் அன்பர்களும் பொதுபல சேனாவின் நண்பர்களாகும். ஏனெனில் பொதுபல சேனாவைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் அவர்களது எதிரிகள் எனவே, எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தனது ஒரு கண் போனாலும் எதிரியின் இரு கண்களும் போகவேண்டும் என்று சிந்தித்து தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்ற பொதுபல சேனாவை தமிழர்களாக இருந்தும் நண்பர்களாகவும் அன்பர்களாகவும் ஆக்கிக்கொள்ள துடிக்கின்ற தமிழ் சகோதரர்கள் கல்முனையில்தான் இருக்கின்றார்கள். 

பொதுபலசேனாவிற்கு கல்முனை தமிழ் பிரதேசத்தில் அலுவலகம் திறக்க அழைப்பு விடுக்கின்ற அளவுக்க முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் அங்கு கையோங்கி நிற்கின்றது. இதனைப் புரிந்து கொள்ளாமல், இவற்றிற்கு எதிராக அறிக்கை விடுவதற்குப் பதிலாக அடுத்த மாவட்டங்களிலிருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு தமிழ் பிரதேச செயலகம் கேட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் மீண்டும் ஒரு முறை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்களின் பேச்சுக்கள் இதய சுத்தியுடன் இருந்தால் இன்று தமிழர்கள் சிங்களத்தரப்பினரிடமிருந்து முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் போன்று முஸ்லிம்கள் தமிழ் தரப்பினரிடமிருந்து எதிர் நோக்குகின்ற பல பிரச்சினைகளுள் நியாயமில்லாத முறையில் கல்முனையை பிரிக்க எத்தனிப்பது, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களிகளின் காணிகளை வழங்காமல் இருப்பது மற்றும் வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தைத் தடுப்பது போன்ற பிரச்சினைகளுக்காவது அவர்கள் அவசரத் தீர்வு வழங்க முன்வர வேண்டும். 

எனவே, குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கூறியதைப்போல தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலக எல்லைகளுக்குள் முஸ்லிம்கள் வாழ முடியாததல்ல இன்றிருக்கின்ற பிரச்சினை, மாறாக முஸலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச எல்லைக்குள் தமிழர்கள் வாழ முடியாது என்பதுதான் இன்று கல்முனையில் இருக்கின்ற பிரச்சினையும், போராடுவோம் என்று அறிக்கை விடுவதற்கும் காரணமாகும். 

இதனை விளங்கிக்கொள்ள முடியாமல்தான் தூர இடங்களிலுள்ள சில அரசியல்வாதிகளும் இதற்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கருத்தில் கொண்டு இனவாத ரீதியாக உருவாக்கப்பட்டு, உப பிரதேச செயலகமாக பெயரிடப்பட்டபோதும் நடைமுறையில் சுமார் 95 வீதம் முழுமையான அதிகாரங்களுடன் இயங்குகின்ற தமிழ் பிரதேச செயலகத்தை மூடி கல்முனை தமிழ் முஸ்லிம்களின் நிரந்தர ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும். அல்லது முழுப் பிரதேச செயலகமாக மாற்றுதல் என்ற பெயரில் வீணாக எல்லைப் பிரச்சினையை உருவாக்கி சமூக சௌஜன்னத்திற்கு குந்தகம் விளைவிப்பதையாவது தடுத்து நிறுத்தவேண்டும். 

கல்முனையில் தமிழ் மக்கள் எல்லோரும் இனவாதிகளல்லர். வரலாற்று ரீதியாக கல்முனையில் வந்த அனைத்து அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு உதவி செய்தே வந்திருக்கின்றார்கள். குறிப்பாக எம்.சீ. அஹமட், ஏ.ஆர். மன்சூர், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆகியோர் தமிழர்களுக்கு நியாயமான சேவையைச் செய்திருக்கின்றார்கள். 

எனவே, ஒரு சில இனவதிகளின் செயற்பாட்டினால் எமது மக்களின் நல்லுறவு பாதிகக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

வியாழன், 19 டிசம்பர், 2013





கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வரின் அறைக்கு ஆப்பு?






கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரத்தியேக அறை தற்போதைய பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்தபோது ஆணையாளரின் அறைக்கு முன்பாக பிரத்தியேக அறை வழங்கப்பட்டிருந்தது. அவ்வறையில் குளிரூட்டி (ஏசி), சோபா, பிரத்தியேக தொலைநகல் (பெக்ஸ்) மற்றும் இணைய இணைப்பு, கணணி, பிறின்டர், ஸ்கேனர் என சகலவிதமான வசதிகளும் முன்னாள் முதல்வர் சிராஸினால் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அவ்வறையில் இருந்த சகல பொருட்களும் அகற்றப்பட்டு ஒரு மேசை கதிரை மாத்திரம் உள்ள ஒரு வெற்று அறையாக காணப்படுகிறது. அவ்வறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட 'பிரதி முதல்வர்' என்ற பெயர்ப் பலகையும் உடைத்து வீசப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபையானது பிரதேச சபையாக காணப்பட்ட காலப்பகுதியில் இருந்து பிரதி தவிசாளர்களுக்கு பிரத்தியேக அறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



இராவணன் முஸ்லிம்--அடித்துக் கூறுகிறார் முபாறக் மௌலவி


இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வராலறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த இராவணன் எப்படி சிங்களவனாவான்?

உண்மையில் இஸ்லாம் இந்து, பௌத்த மதங்களுக்கு முற்பட்டது என்பதாலும் முதல் முஸ்லிமும் முதல் மனிதனுமான ஆதம் இலங்கையில்; இறங்கி அவரின் வாரிசுகள் இங்கேயே வாழ்ந்தனர் என்பதனாலேயே ஆதம் வாரிசு என்ற அறபுச்சொல் ஆதிவாசியாக மருவியுள்ளதை காணலாம். அத்துடன் இலங்கை இந்திய எல்லையில் அழிந்து போன பாலத்தை ஆதம் பாலம் என்றே அங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பாலத்தின் வழியாகவே ஆதம் மக்கா சென்று திரும்பினார். சேது பாலம் என தமிழில் அழைக்கப்படும் பெயர் கூட சீது என்ற இறைத்தூதரின் பெயராகும் என்பதை இஸ்லாம் கூறுகிறது.

அதே போல் இராவணன் சம்பந்தப்பட்ட வரலாற்றுக்கதையில் வரும் பெயர்களான ராவணன் என்பது அரசன் என்ற பொருள் கொண்ட ராஇனன் என்பதும் ராமன் என்பது ரஹ்மான் என்பதும் சீதா என்பது சய்யிதா என்பதையும் அனுமான் என்பது நுஃமான் என்பதையும் வாலி என்பது அதே அறபுச்சொல் மூலம் பாவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தப்பெயர்களுக்கும் இந்து, பௌத்த பெயர்களுக்கும் எந்தவொரு நெருக்கத்தையும் நாம் காண முடியாது. மாறாக அறபு மொழிக்கே மிக மிக நெருக்கமாக உள்ளன.

ஆக ராம் மற்றும் ராவணன் வரலாறு என்பது முஸ்லிம்களின் வரலாறாகும். காலப்போக்கில் இந்த வரலாறு திரிபு படுத்தப்பட்டு இந்துக்கள் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வாறு மோசே என்ற மூசாவை பின்தொடர்ந்த முஸ்லிம்கள் அவர் இல்லாத போது காளை மாட்டை வணங்கி இந்துக்காளாக மாறினார்களோ அவ்வாறே இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்களாக, பௌத்தர்களாக மாறியுள்ளனர்.

ஆகவே இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகமாகவே இருந்துள்ளது என்பதை எம்மால் உறுதிபட கூற முடியும் என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்தார்.



சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்


வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. வட கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள் , கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள் வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி பணிக்கப்படுகிறார்கள் என்று அரியநேத்திரன் கூறுகிறார்.
எனவே வட கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறியதாக அவர் தெரிவித்தார்.
சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடவேண்டுமாக இருந்தால் , தேசிய கீதமே பாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒரு நிர்வாக மொழியாக தமிழ் இருக்கும்போது , ஏன் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும் நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்தக் கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்ளே எனவும் , அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்லவென்றும் அவர் தெளிவுபடுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.



பௌத்த நாட்டில் முஸ்லிம் கொள்கைகளுக்கு இடமில்லை : பொதுபல சேனா எச்சரிக்கை

  
முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையுமென பொது பல சேனா பௌத்த  அமைப்பு எச்சரித்துள்ளது.
இதேவேளை, தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இலங்கையில் இடமில்லை. பிரிவினை கோருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர். 
தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது.
அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



''பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தடை விதித்­தமை நீங்கள் கூறும்­வரை எனக்கு தெரியாது'': ஹக்கீமிடம் ஜனாதிபதி


 தெஹி­வளை பிர­தே­சத்தில் மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது பற்றி தம்­மிடம் அமைச்சர் ஹக்கீம் புதன்­கி­ழமை கூறும்­வரை வேறெ­வரும் அது­பற்றி சொல்­ல­வில்­லை­யென ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார். இந்த விட­யத்தில் உரிய கவனம் செலுத்­தப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி அமைச்சர் ஹக்­கீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.
தெஹி­வளைப் பகு­தியில் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை நடத்­து­வ­தற்கு பொலிஸார் தடை விதித்­துள்­ளமை குறித்தும் முஸ்லிம் பள்ளி வாசல்­க­ளுக்கு எதி­ராக மேற்கொள்­ளப்­படும் வன்­மு­றைகள் தொடர்­பிலும் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கவ­னத்திற்கு ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்­க­ரஸின் தலை­வரும் நீதி­ய­ம­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கொண்­டு­வந்­துள்ளார்.
நேற்றுக் காலை அலரி மாளி­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் குறித்து அர­சாங்­க­மா­னது உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் கொந்­த­ளிப்­பையும் விச­னத்­தையும் உண்­டு­பண்­ணு­கின்­றது. எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தெஹி­வளை களு­போ­வில மஸ்­ஜிதுல் தாருல் ஷாபி, தெஹி­வளை தாருல் அர்க்கம், தெஹி­வளை அத்­தி­டிய மஸ்­ஜிதுல் ஹிபா ஆகிய பள்­ளி­வா­சல்­களை மூடு­மாறு பொலிஸார் வற்­பு­றுத்­து­வது பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்டி, பள்­ளி­வாசல் தொடர்­பான விவ­காரம் அர­சாங்­கத்­திற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு முஸ்­லிம்கள் மத்­தியில் கொதிப்­பையும் விச­னத்­தையும் உண்டு பண்­ணு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.
விஷம சக்­தி­களால் உந்­தப்­பட்டு, அர­சாங்க உயர்­மட்­டத்­திற்கு தெரி­யாத விதத்தில் பொலிஸார் தான்­தோன்­றித்­த­ன­மாக இவ்­வா­றான இன முறு­கலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சமய விரோத நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வது கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­தென்று அமைச்சர் ஹக்கீம் கூறி­யுள்ளார்.
மூன்று பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­மாறு தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்பில் தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என அமைச்சர் ஹக்­கீ­மிடம் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி, தெஹி­வளை பிர­தே­சத்தில் மத்­ரஸா நடத்­து­வ­தென்று அனு­மதி பெற்று தொழுகை நடத்தும் ஓரி­டத்தைப் பற்றி மட்டும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சொல்­லி­யுள்ளார். அது­பற்றி அமைச்சர் பெள­சியும் தம்­மிடம் சுட்­டிக்­காட்டி கவலை தெரி­வித்­த­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் முஸ்­லிம்கள் நாள்­தோறும் ஐவே­ளைகள் தொழு­கையில் ஈடு­ப­டு­வது இஸ்­லாத்தின் கட்­டாய கட­மை­களில் ஒன்று என்ற கார­ணத்­தினால் மத்­ர­ஸாக்­களில் தொழு­வ­தைக்­கூட தடுக்­கக்­கூ­டா­தென ஜனா­தி­ப­தி­யிடம் தெரிவித்துள்ளார்.



SMS மூலம் புகாரிடும் முறை அறிமுகம்

ஜனவரி முதல் நடைமுறை
அமைச்சர் நவீன் திசாநாயக்க சபையில் அறிவிப்பு
 
அரச ஊழியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஊக்குவிப்பு (போனஸ்) கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். இதன் ஊடாகவே அவர்களிடமிருந்து தரமான சேவையை எதிர்பார்க்க முடியும் என அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சேவையில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக எமது அமைச்சு தீவிர முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது. அரச ஊழியர்களின் கடமைகள் தொடர்பாக எமது அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் போது அரச ஊழியர்கள் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
5 மணி நேரம் மட்டுமே ஒரு அரச ஊழியர் கடமை புரிந்தால் அரச நிர்வாக சேவையின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவோம். இதனை முற்றாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக அரச நிறுவனங்களில் 5 எஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பாக அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் செய்யப்படவுள்ளன.
முதற்கட்டமாக குருநாகல் மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் இவை முன்னெடுக்கப்பட வுள்ளது. அத்துடன் அரச நிறுவன மொன்றுக்கு செல்லும் ஒருவர் தமக்கு தேவையான வேலையை செய்வதற்கு முடியாது போகுமிடத்து அதனை எஸ். எம். எஸ். குறுந்தகவல் ஊடாக முறைப் பாடு செய்து தேவையான தகவலைப் பெறுவதற்கான முறை ஒன்று ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது. 40,000 ரூபா வரையிலான குறைந்த சம்பளத்தை பெறுகின்றனர். வெளிநாடுகளில் அரச ஊழியர் ஒருவரின் கடமைகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவருக்கு போனஸ் வழங்கும் நடவடிக்கையும் உள்ளன. இதேபோன்று இலங்கையிலும் போனஸ் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
அரச முகாமைத்துவ, மறுசீரமைப்பு அமைச்சு உட்பட தெரிவுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.