சனி, 15 அக்டோபர், 2011





widgeo.net
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ்
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் பிரதிமேயராக சட்டத்தரணி  நிசாம் காரியப்பரும் தெரிவுசெய்யபட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் அறிவித்துள்ளார்.
03.10.1974 இல் பிறந்த கலாநிதி  சிராஸ் மீராசாஹிப்  மர்ஹூம். அபூபக்கர்மீராசாஹிப் உதுமாங்கண்டு பல்கீஸ் தம்பதியரின் மூன்றாவது புதல்வராவார்.

தனது ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தில் ஆரம்பித்த இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் சிறிது காலம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலும்  தனது கல்வியை தொடர்ந்தார். 
லண்டனில் தனது உயர்கல்வியை பயின்ற இவர் வியாபார முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களையும்  பெற்றுள்ளார். தனது உயர்கல்வியை பூர்த்திசெய்த பின்னர் கொழும்பு தெகிவளையில் மெட்ரோ பொலிற்றன் கல்லூரியை ஸ்தாபித்து கல்வித் துறைக்கு சேவையாற்றிவரும் இவர் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டதன் மூலம்
அரசியலில்பிரவேசித்தார்.

தனது முதலாவது பிரவேசத்தின் போதே மக்களின் மனங்களில் இடம்பிடித்த இவர் இத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்காக 16457  வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குப்பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலமாக கல்முனை மாநகரின் நான்காவது மேயராக தெரிவாகியுள்ளார்.