வியாழன், 13 மார்ச், 2014

முஸ்லிம் காங்கிரஸ் பற்றி கருத்து வெளியிட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு அருகதை கிடையாது



முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி தவறான கருத்துகளை வெளியிடுவதற்கு பிரதி அமைச்சர் பைசா முஸ்தபாவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைப் பொருத்தமட்டில் நாங்கள் அனைவரும் எப்போதும் சமூகத்த்துடனும் கட்சியுடனுமே இணைந்திருப்போமே தவிர பைசர் முஸ்தபா போன்று பதவி ஒன்றுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டு அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியுடனேயே இணைந்திருப்பார்கள் என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

'இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஓர் உயர்ந்த நோக்கத்துடன் மறைந்த பெரும் தலைவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.

அன்று நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயுத கலாசாரம் தலை தூக்கியிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக
வழிமுறையில் அவர்களை நெறிப்படுத்தி- கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொண்டுஇ இந்த சமூகத்தை பாதுகாத்து வழிநடாத்திய பேரியக்கமே இந்த முஸ்லிம் காங்கிரஸாகும்

அன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேலோங்கியிருந்த போது மறைந்த பெரும் தலைவர் எவ்வாறான ராஜதந்திரங்களுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையாண்டாரோஇ அவ்வாரே இன்று சிங்களப் பேரினவாதக் குழுக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான நகர்வுகளை தற்போதைய தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்து வருகின்றார்.

இந்த நாட்டில் இருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் சிங்களப் பேரினவாதம் பள்ளிவாசல்களையும் இஸ்லாம் மார்க்க விடயங்களையும் குறி வைத்து அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில்இ முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இப்பிரச்சினைககளை நிதானமாக கையாண்டு வருகின்றது.

தற்போது முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு வன்முறைகளை தூண்டி விடாமல் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் குரல் எழுப்பிஇ தீர்வுகளை வேண்டி நிற்கின்றது.

பைசர் முஸ்தபா போன்ற முஸ்லிம் அமைச்சர்கள்இ பிரதி அமைச்சர்கள் எல்லோரும் தமது பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருந்து கொண்டுஇ சமூகத்திற்கு துரோகமிழைத்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் பேரினவாத கெடுபிடிகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இவர்கள் காட்டிக் கொடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்து ஐ.நா. வரை அது பிரஸ்தாபிக்கப்படும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையை ஜனாதிபதி கண்டித்து- எச்சரித்துள்ள நிலையில் அதற்கு பந்தாப்பிடிக்கும் வகையில் பைசர் முஸ்தபா கருத்துக் கூறியுள்ளார்.

அதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியுடனேயே இணைந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கும் விடயமானது அவர் போன்ற பதவிப் பேராசை பிடித்த கோழைகளுக்கே பொருந்தும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்கின்றேன்.

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த சமூகத்திற்கோ கட்சிக்கோ துரோகமிழைக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அந்த சபைக்கான கட்சியின் குழுத் தலைவர் என்ற ரீதியில் மிகவும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற எமது கட்சிஇ அந்த ஆதரவை விலக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டால் ஒரு நிமிடம் கூட தாமதியாமல் அந்த ஆட்சிக் கூட்டில் இருந்து வெளியேறுவதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தயாராகவே இருக்கின்றோம். இதில் எம்மிடையே மாறுபட்ட நிலைப்பாடு கிடையாது.

கிழக்கு மாகாண சபையில் நாம் ஆளும் தரப்பில் இருக்கின்ற போதிலும் சமூக விடயங்களில் சுயாதீனமாகவெ செயற்பட்டு வருகின்றோம். இதன்போது ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாம் சமூகத்திற்கும் எமது கட்சிக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க முனையவில்லை.

அதற்குஇ 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை ஏற்று கிழக்கு மாகாண சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒரு நல்ல உதாரணமாகும்.. இதனை சமர்ப்பிப்பதிலும் நிறைவேற்றுவதிலும் மு.கா. உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று அரச தரப்பினருடன் போரிட்டு வெற்றி கண்டோம் என்பதை இங்கு ஞாபகமூட்டுகின்றேன். .

அப்போது இந்தப் பிரேரணையைக் கை விடுமாறு அரச உயர் மட்டத்தில் இருந்து எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் வந்ததுடன் ஆசை வார்த்தைகளும் காட்டப்பட்டன. ஆனால் நாம் அஞ்சவுமில்லை சலுகைகளுக்காக சோரம் போகவும் இல்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து எமது கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றே நாம் இங்கு அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம். அப்போது அந்த தீர்மானத்தில் நாங்கள் எவரும் முரண்பட்டுக் கொள்ளவில்லை. அது போன்றே விலகுவது எனத் தீர்மானித்தாலும் அதனை சமூகப்பற்றுடன் முழு மனதுடன் ஏற்று செயற்பட நாம் தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதை பைசர் முஸ்தபா போன்ற அரசின் அடி வருடிகளுக்கு மீண்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கின்றேன்' என்று ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவுக்கு எதிராக ஜெனிவாவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்



ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (14) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமாகவுள்ள இந்தப்பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை நகர் ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட பள்ளிவாசல்கள், வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.