ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி



நற்பிட்டிமுனையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நற்பிட்டிமுனை அல் அக்ஸா ம.வி.ல் கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா 172 புள்ளிகளைப் பெற்று இவ்ருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.
  
இம்மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.........

இம்மாணவின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

இது போன்று வேறு யாராவது நமது கிராமத்தில் சித்தி அடைந்திருந்தால் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மஹா வித்தியாலயத்தில்  கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா  இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்து இவ் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
இம்மாணவிக்கு எமது இணையம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

சனி, 27 செப்டம்பர், 2014

ரணில் தர முன்வந்த கரை­யோர மாவட்­டம், பிரதேச வாதத்தினால் தான் கிடைக்காமல் போனது!





SD82412
கடந்த 22ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­யன்று அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் தன்னை கரை­யோர மாவட்ட உரு­வாக்­கத்­திற்கு எதி­ரா­ன­வராகச் சித்­தி­ரித்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மு.கா.வின் செயலாளர் ஹஸன் அலி எம்.பி.க்கு எழுதிய கடிதம்
எனது பாரா­ளு­மன்ற உரைகள் அடங்­கிய ‘சோர்­வி­லாச்சொல்’ நூல் வெளி­யீட்டு வைபவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நடை­பெற்­ற­போது நான் நிகழ்த்­திய உரையில் கரை­யோர மாவட்டம் முஸ்­லிம்­களின் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு அல்­ல­வென்று தெரி­வித்­தி­ருந்தேன்.
எனது இக்­க­ருத்தை கரை­யோர மாவட்டம் தேவை­யில்­லை­யென்று நான் கூறி­யது போல திரி­வு­ப­டுத்­திக் ­காட்டி தனிப்­பட்ட முறையில் எனக்கு எதி­ராக ஓர் அர­சியல் கண்­டனத் தீர்­மானம் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதைக் கண்­டிப்­ப­தோடு இதனைக் கட்­சியின் கவ­னத்­திற்குக் கொண்டு வரு­கிறேன். இது சம்­பந்­த­மாக கட்சி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தங்­களை அன்­புடன் கோரு­கிறேன்.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலம் தொட்டு இன்­று­வரை கட்­சிக்குப் பெரும் மதிப்­ப­ளித்து தொடர்ச்­சி­யாக அட்­டா­ளைச்­சேனை மக்கள் அளித்­து­வரும் ஆத­ர­வுக்­காக அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு எனது அதீத மதிப்­பையும் கண்­ணி­யத்­தையும் எப்­போதும் செலுத்தி வரு­கின்றேன்.
முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு தென்கிழக்கு அலகே!
முஸ்­லிம்­களின் தேசி­யப்­பி­ரச்­சினை என்­பது பாது­காப்பும் காணிப்­பி­ரச்­சி­னை­யுமே என்­பதைக் கட்சிக் கூட்­டங்­களில் தொடர்ச்­சி­யாகக் கூறிவந்­துள்ளேன். இதுவே இப்­போதும் கூட எனது உறு­தி­யான நிலைப்­பா­டாக உள்­ளது. இதே­நேரம் வட, ­கி­ழக்கைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்­பது நிலத் ­தொ­டர்­பற்ற தென்­ கிழக்கு அலகே அன்றி வேறில்லை என்­பதும் என் நிலைப்­பா­டாகும்.
அஷ்ரப் இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் நிலத்­தொ­டர்­பற்ற தென்­கி­ழக்கு அல­குதான் முஸ்­லிம்­களைத் திருப்­திப்­ப­டுத்தும் தீர்­வாகும் என்­பதை மிகத்­தெ­ளி­வாகக் கூறி விட்டே மறைந்­துள்ளார். இவ்­வ­லகு விட­யத்தில் அவர் கொண்ட திருப்­திதான் 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­வினால் இனப்பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக முன்­வைக்­கப்­பட்ட புதிய அர­சியல் யாப்­பினை பாரா­ளு­மன்றில் முன்­மொ­ழிந்து மூன்று மணி நேர­மாக உரை­யாற்றக் கார­ண­மா­கி­யது.
தென்­கி­ழக்கு அலகைப் பெறு­கின்­ற­போது இதன் இன்­னொரு பெறு­பே­றாக கரை­யோர மாவட்டம் தானா­கவே சாத்­தி­ய­மாகும் என்­பதே அவரின் பார்­வை­யா­கவும் தர்க்­க­மா­கவும் இருந்­தது. முஸ்­லிம்­களின் அர­சியல் நிர்­வாக அபி­லா­ஷையில் முத­லா­வது அம்சம் தனி அலகு என்­ப­தாகும். இரண்­டா­வது அம்சம் கரை­யோர மாவட்­ட­மா­கவும் இருக்க முடியும் என்­பதே என் என்­றென்­றைக்­கு­மான நிலைப்­பா­டாகும்.
தென்­கி­ழக்கு அலகு என்­பது அம்­பாறை மாவட்­டத்தில் அமைந்­தி­ருக்­கிற சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­முனை ஆகிய முஸ்லிம் பெரும்­பான்மை தொகு­திகள் மூன்­றையும் மாத்­தி­ரமே உள்­ள­டக்­கிய ஓர் அலகு என்று அப்­பு­திய யாப்பில் மொழி­யப்­பட்­டி­ருந்­த­மையால் ஏனைய வட கிழக்கின் முஸ்லிம் பெரும்­பான்மைப் பகு­தி­களில் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்­பிய போதும் அவ்­வ­ல­குக்கு ஆத­ர­வ­ளித்­தவன் நான்.
அக்­கா­லத்தில் ‘அகண்ட தென்­கி­ழக்கு’ என்­பதைப் பரிந்­துரை செய்து அத்­த­லைப்பில் புத்­தகம் ஒன்­றையும் எழு­தி­யி­ருந்தேன். இப்­புத்­த­கத்தைத் தலைவர் அஷ்ரப் கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீ­டாக வெளி­யிட்­டி­ருந்தார். எந்த மூலை­யி­லா­வது ஒரு கைக்குட்­டை­ய­ள­வி­ன­தா­யினும் முஸ்லிம் மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஓர் அலகு அவ­சியம் என்­பதில் உறு­தி­யா­கவே இருந்தேன்.
வடக்கு, கிழக்­கிலே அம்­பா­றைக்கு வெளியில் இருந்த அன்­றைய பல முஸ்லிம் காங்­கிரஸ் பிராந்­தியத் தலை­வர்­களும் அப்­ப­குதி முஸ்­லிம்­களும் தென்­கி­ழக்கு அல­குக்கு எதி­ரான கருத்­த­ரங்­கு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தனர் என்­ப­தையும் இவ்­வி­டத்தில் நினைவுகூரு­கின்றேன்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­யாக இருந்தபோதும் தென்­கி­ழக்கு அலகை ஆத­ரித்­ததில் நான் இன­வாதம், மத­வாதம், பிர­தே­ச­வாதம் என்­பன கடந்தும் வாக்குவேட்டை அர­சி­யலைத் துறந்தும் செயற்­ப­டு­கின்றேன் என்­கிற மன நிறைவு எனக்­குண்டு.
ரணில் கரை­யோர மாவட்­டம் தர முன்வந்தார்!
2001-2004ஆம் ஆண்டு வரை­யான முஸ்லிம் காங்­கிரஸ் பங்­கா­ளி­யாக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கோரிக்­கைக்­க­மைய அர­சினால் கரை­யோர மாவட்­டத்­திற்­கான அங்­கீ­காரம் கிடைக்­கப் ­பெற்றபோது கரை­யோர மாவட்டச் செய­லகம் எந்த ஊரில் அமை­வது என்­கிற விட­யத்தில் உடன்­பாடு எட்­ட­ மு­டி­யாத பிர­தே­ச­வாதப் பிரச்­சி­னை­யினால் கைக்­கெட்­டிய மாவட்டம் வாய்க்­கெட்­டாமல் போன­மையையும் நினை­வூட்ட விரும்­பு­கிறேன்.
இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் தவிர்க்க முடி­யா­த­ப­டிக்கு பிராந்­தியப் பங்­கா­ளி­யாக இருக்­கின்ற இந்­தி­யாவின் அர­சி­யலில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இனப்­பி­ரச்­சி­னை­யினால் உற்­பத்­தி­யான ஆயுதப்போராட்­டத்தின் விளை­வாக உயி­ரி­ழந்த முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியின் இந்­திய காங்­கிரஸ் கட்­சியின் ஒரு தசாப்த கால ஆட்சி மாறி தற்­போது பார­தீய ஜனதாக் கட்­சியின் மோடி கைக்குச் சென்­றி­ருக்­கி­றது.
புதி­தாக ஆட்­சி­ய­மைத்­துள்ள பிர­தமர் மோடி இலங்­கையின் அரச தலை­வர்­களை விட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து சந்­தித்­துள்ளார். இச்­சந்­திப்பில் இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­காக இலங்கை அரசின் மீது தாம் அழுத்தம் பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாக தமிழ் தலை­வர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.
அரசு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­போடு பேசு­வ­தற்குத் தயார் என்று அறி­வித்­துள்­ள­மையும் பல முட்­டுக்­கட்­டைகள் இருந்த போதும் அதனைக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ள­மையும் முக்­கிய அர­சியல் நிகழ்­வாகும்.
இவ்­வா­றான ஒரு தேசிய அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரஸும் வட­, கி­ழக்கு வாழ் முஸ்­லிம்­களும் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் தமது பங்கு பற்­றிய கரி­ச­னையை முன்­னி­லைப்­ப­டுத்தல் வேண்டும். பேச்­சு­வார்த்­தையில் தனித்­தரப்பு, முஸ்லிம் பெரும்­பான்மை அர­சியல் அலகு ஆகிய முஸ்­லிம்­களின் இரண்டு பிர­தான கோரிக்­கை­களும் கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து நாம் செய்துவந்த அடை­யாள அர­சியல் தேய்­வினால் இன்று மங்கி ஒளி­யிழந்து போயுள்­ளன.
தமிழரின் உறுதியான போராட்டம்!
ஆனால், தமிழ் மக்கள் இவ்­வ­ளவு அழி­வு­களைச் சந்­தித்த பின்­னரும் “நாங்கள் தோற்­று­ விட்டோம். ஆனால் யாருக்கும் அடி­மை­யில்ல” என்று நிரூ­பித்த வண்ணம் உறு­தி­யாக தமிழ்த் ­தே­சிய அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தமிழ்த் ­தே­சிய இனத்­துவ அர­சி­யலின் புதிய போக்கில் போரா­ளிகள் என்ற பதம் போராட்­டக்­கா­ரர்கள் என்றும் பொடி­யன்கள் என்­பது மக்கள் என்றும் உருப்­ப­டி­யான வடிவ மாற்றம் பெற்­றுள்­ள­மையை முஸ்லிம் தேசிய அர­சியல் கவ­னப்­ப­டுத்தி மதிப்­ப­ளித்து செயற்­ப­டுதல் வேண்டும்.
இக்­கால கட்­டத்தில் எந்த வகை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்­பதை சுருக்கிக் கொள்­ளக்­கூ­டாது. விரைவில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­ற­வுள்­ளது. இப்­பேச்­சு­வார்த்தை நுனிப்புல் மேய்­வ­தாக இருக்­கக்­கூ­டாது.
அர­சு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் இணைந்த ஒரு தரப்­பாக கலந்து கொள்­வது அல்­லது உடன்­பாடு எட்­டிய நிலையில் தனித்­தனி தரப்­புக்­க­ளாகக் கலந்துகொள்ளும் சாத்­தியம் பற்றி ஆராய வேண்டும்.
ஒரு தரப்பை மறு தரப்பின் அர­சியல் அபி­லா­ஷையைத் தட்­டிப்­ப­றிப்­ப­தற்­கான கரு­வி­யாக அர­சுகள் பாவிக்கும் வாய்ப்­புண்டு. ஒட்­டு­மொத்த வட­, கி­ழக்கில் முஸ்லிம் தரப்பை தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவும் தமிழ்த் தரப்பை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் பாவிக்கும் சாத்­தி­யப்­பாட்டை முறி­ய­டிக்கும் வகையில் சிறு­பான்மை தரப்பு கள வியூகம் அமைத்துச் செயற்­பட வேண்டும்.
தீர்வில் தமிழ் மக்­களின் அடிப்­படை அபி­லா­ஷை­யான வட, ­கி­ழக்கு இணைப்பில் முஸ்லிம் தரப்பு எவ்­வாறு உத­வலாம் என்றும் அவ்­வாறே முஸ்லிம் மக்­களின் அடிப்­படை அர­சியல் விருப்­பான நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் பெரும்­பான்மை அலகு என்­பதை எவ்­வாறு குறைந்­த­பட்­ச­மேனும் தமிழ்த் தரப்பு அங்­கீ­க­ரிக்­கலாம் என்­பது பற்­றியும் கலந்­து­ரை­யாட வேண்டும்.
கரை­யோர மாவட்­டத்­துக்­கான அங்­கீ­கா­ரத்­தையும் அனு­ச­ர­ணை­யையும் தமிழ் தரப்பு எவ்­வாறு மேற்­கொள்­ளலாம் என்­ப­தையும் கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் அமைய வேண்டும் என்­கிற அப்­ப­குதி தமிழ் மக்­களின் விருப்­பத்தை முஸ்லிம் தரப்பு எவ்­வாறு அங்­கீ­க­ரித்து சாத்­தி­யப்­ப­டுத்­தலாம் என்­ப­தையும் பற்றி கலந்­து­ரை­யாட வேண்டும்.
இந்த அடிப்­ப­டை­யான மூன்று விட­யங்­க­ளிலும் வட,­கி­ழக்கில் வாழும் சிறு­பான்மை மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இரண்டு தரப்­பு­க்களும் புரிந்­து­ணர்வு உடன்­பாட்­டிற்கு வரமுடியாவிட்டால் முஸ்­லிம்­களின் தனித்­த­ரப்பு நிலத்­தொ­டர்­பற்ற அர­சியல் அலகு, கரை­யோர மாவட்டம் ஆகிய விருப்­பு­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்­க­ளையும் வட,­கி­ழக்கு இணைவு, கல்­முனைத் தமிழ் பிர­தேச செய­லக அமைவு ஆகிய தமிழ் மக்­களின் விருப்­பங்­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் மக்­க­ளையும் வழமை போல சிங்­கள அர­சியல் தலை­மைகள் பயன்­ப­டுத்தும் வழ­மையை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யாது என்­பதைச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.
தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைத்து கண்டனத் தீர்மானம்!
மீண்டும் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் தீர்­மா­னத்­திற்கு வரு­கிறேன். இப்­பி­ர­தேச சபை உறுப்­பி­னர்கள் கரை­யோர மாவட்­டத்­திற்கு எதி­ரா­ன­வ­னாக என்னைக் காட்­டு­வ­தற்கு தீர்­மானம் எடுப்­ப­தற்குப் பதி­லாக, கரை­யோர மாவட்­டத்தின் அவ­சி­யத்தை அர­சுக்கு உணர்த்தும் வகையில் ஆத­ரவுத் தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­றி­யி­ருக்க வேண்டும்.
இப்­பி­ர­தேச சபை தவி­சா­ளரும் உறுப்­பி­னர்­களும் உண்­மை­யி­லேயே கரை­யோர மாவட்ட உரு­வாக்­கத்தில் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக இருப்பின் கிழக்கில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆட்­சியில் உள்ள எல்லா உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் ஆத­ரவுத் தீர்­மானம் நிறை­வேற்­று­மாறு வேண்­டுகோள் விடுத்­தி­ருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் உடன்­பாட்­டுக்கு வந்து வட­, கி­ழக்கில் கூட்­ட­மைப்பின் கட்­டுப்­பாட்டில் உள்ள எல்லா சபை­க­ளிலும் ஆத­ரவுத் தீர்­மானம் நிறை­வேற்ற முயற்­சித்­தி­ருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடத்திற்கு கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துங்கள் என்று கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
கரையோர மாவட்டம் என்பது வெறும் நிர்வாக மாவட்டமா அல்லது முழுமையான தேர்தல் நிர்வாக மாவட்டமா என்பதைப் பற்றி ஆகக்குறைந்தது அட்டாளைச்சேனை பிரதேச சபையிலாவது தெளிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் கட்சியின் அரசியல் அதியுயர் பீடமே அதனைச் செய்ய முடியும் என்பதையும் இவ்விடயம் சம்பந்தமாக கட்சி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தீர்மானம் தனிப்பட்ட முறையில் என்னை இலக்குவைத்து எடுக்கப்பட்டது என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.
எனவே, இவ்விடயம் சம்பந்தமாக என்னையும் மேற்படி சபை உறுப்பினர் களையும் அரசியல் உயர்பீடம் முன்னிலை யில் விசாரிக்க அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்ட மாநகர சபை தீர்மானம்!




Mayor




கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்டுவதற்கு மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்மொழிய அதனை ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரித்தனர்.
இந்த பீச் பார்க் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த தினமான எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதியன்று இதனைத் திறப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் நாமத்தை சூட்டுவதற்கும் அதனை அவரது பிறந்த தினத்தில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்ற மாநகர முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் குறிப்பிட்டார்.
இந்த சபை அமர்வில் வேறு பல விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.
சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பு, கல்முனையில் புகையிரத ஆசனப் பதிவுக் காரியாலயம் அமைத்தல் மற்றும் சாய்ந்தமருது வரவேற்புக் கோபுரம் போன்ற விடயங்கள் தொடர்பில் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் பிரஸ்தாபித்தார்.
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானம் தொடர்பில் உறுப்பினர்களானஏ.எச் .எச்.எம் .நபார், எம்.எல்.சாலிதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பை கூளங்களைப் போடுதல், வீதிகளில் மண், கல் மற்றும் கட்டிடப் பொருட்களை குவித்து வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவைக்கை எடுத்து அவர்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடப்பட வேண்டியதன் அவசியம் பற்றி உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் வலியுறுத்திப் பேசினார்.
மருதமுனையில் ஒரு பீச் பார்க் அமைப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் ஏ.எம்.முஸ்தபா உரையாற்றினார்.
கல்முனையில் இருந்து இரவு நேர பஸ் சேவைகள் நடாத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் வலியுறுத்தினார்.
கல்முனையின் மேற்கு எல்லையான கிட்டங்கி உட்பட தமிழ் பகுதிகளும் நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பிரகாசமூட்டப்பட வேண்டும் என்று உறுப்பினர் எம்.ஜெயக்குமார் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய வறட்சி காரணமாக தமிழ் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி உறுப்பினர் கமலதாசன் விபரித்துக் கூறினார்.
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????

???????????????????????????????
???????????????????????????????
Aslam moulana (7)

ஹஜ்ஜுப் பெருநாளை ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட தீர்மானம்




 



துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல்ஹஜ்  மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நற்பிட்டிமுனை அஷ்ரப் மைதானத்திற்கு பொது மக்களால் மண்ணிட ஏற்பாடு




கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை  அஷ்ரப் மைதானம்  விளையாட தகுதியற்ற நிலையில்  கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. மாரி காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கி சேற்று நிலமாகவும் ,இன்று குப்பைகள் கொட்டும் திடலாகவும்  காட்சியளிக்கின்றது.

இதனை பல் வேறுபட்ட அரசியல்வாதிகளுடனும், மந்திரிகளுடனும் மேன்முறை செய்தும் எதுவித பயனும் கிடைக்காமால் புறக்ககணிக்கப் பட்டதால் இன்று ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இம் மைதானத்திற்கு மண் கொட்ட முன்வந்துள்ளனர்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம்




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும்  முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச  அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ்  அறிவித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து  14ஆவது வருடத்தை  நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை  அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார  முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல்,  உட்கட்டமைப்பு  அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.