சனி, 28 ஜூன், 2014

கலந்துரையாடலை நடத்த நீதிமன்றம் அனுமதி






மெஸ்ரோ அமைப்பினால் நேற்று  வெள்ளிக்கிழமை(27) நடத்தப்படவிருந்த கூட்டத்திற்கு தடை விதிக்குமாறுகோரி கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை   கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனமான மெஸ்ரோ, 'முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்றையும்  துஆ பிரார்த்தனையையும்  வெள்ளிக்கிழமை(27) மாலை சாய்ந்தமருது  லீமெரிடியன்  மண்டபத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. 

இதில், ' எங்கள் மீதுள்ள எதிர்ப்புணர்வுகள் என்ன?,  எங்களை அழித்தொழிப்பதற்கு முன்வைக்ககப்படும் காரணங்கள் என்ன?,  இதில் எங்களுடைய பலவீனங்கள் என்ன?,  எதிரிகளின் பலங்கள் என்ன? என்பது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருத்துக்களை வழங்க இருந்தனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்நிலையில், இந்நிகழ்வை தடுப்பதற்கு மேலிடத்திலிருந்து வந்ததாக கூறப்படும் அழுத்தத்தை தொடர்ந்து கல்முனைப் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை(27) காலை வழக்குத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி   எம்.பி.முஹைடீன்,  வழக்கை தள்ளுபடி செய்து கலந்துரையாடலை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.  இதனடிப்படையில் கலந்துரையாடல்  திட்டமிட்டப்படி நடத்தப்படவுள்ளது.

ஞாயிறு, 22 ஜூன், 2014

பட்டமளிப்பு விழா



கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரியின் பைஸல் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் யு.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிப்பீட பீடாதிபதி அஸ்-ஷெய்க் ஏ.அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதியாகவும்  ஏனைய பிரதேச அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.மேலும், பட்டம்பெற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


வயலுக்குள் வீழ்ந்தது குளிர்பான லொறி




 இன்று மாலை 5.30 மணியளவில் (22.06.2014) அக்கரைப்பற்றிலிருந்து குளிர்பான போத்தல்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிவந்து கொண்டிருந்த குளிர்பான லொறி அட்டப்பள்ள வீதியில் வைத்து பாதையை விட்டு விலகி   வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வாகன சாரதி உட்பட நான்கு பேர் காயத்திற்குள்ளாகி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








சனி, 21 ஜூன், 2014

பாணந்துறை நோலிமிட் எரியூட்டல் இப்போது என்ன நடக்கிறது ?



நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இன்று (21) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு 
படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது .
முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக  சாம்பராக்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .











பெற்றோல் குண்டுத் தாக்குதல்
இன்று அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்த கட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும் எனத் அமைச்சர் ஹகீம் தெரிவித்தார்
 ரவூப் ஹக்கீம் அமைசச்ர் ரெஜிநோல் குரேஸ் தலத்திற்கு விஜயம்
நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவத்தை பார்வையிட்டார். அத்துடன், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் – நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்
பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர்:-  ரெஜிநோல் குரே
அமைசச்ர் ரெஜிநோல் குரே – இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இனஜக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும் பாணந்துறையில் பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.என தெரிவித்தார் .
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர்
 ஸ்தலத்துக்குச் சென்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க  சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேல் மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர்   ஆகியோரும்  சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அவசர விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அரச இரசாயன பகுப்பாய்வாளரை இதில் ஈடுபடுத்திக் கொள்ளவும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்
விசேட அதிரடிப்படை நிறுத்தப் பட்டுள்ளது
பாணந்துறையில் விசேட அதிரடிப்படையினர்(எஸ்.டி.எப்)  அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் . பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்தே மேலதிக  விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பலின் நடமாட்டம் 
 கடந்த 17 ஆம் திகதி இரவு பாணந்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் குறித்த பகுதில் நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
நோ-லிமிட் மிகப்  பெரிய வியார ஸ்தாபணமாகும் 
சாம்பலாகியுள்ளது. நோலிமிட்டின் மிகப் பெரிய வியார ஸ்தாபணமாகும்  கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்  சொந்தக்; கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அதன் அருகில் உள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மணித்து கொடுத்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.
இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர்.
ஜனாதிபதியை முஸ்லிம் அமைச்சர்கள் அவரசமாக சந்திக்க ஏற்பாடு
தற்போது  பதுலளையில் இருக்கும் ஜனாதிபதியுடன்  விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த விசேட ஹெலிஹொப் டர்கள் மூலம்   முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது . அமைச்சர் ஹக்கீம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

அளுத்கம மற்றும் தர்காநகர் போன்ற பாதிக்கப்பட்ட  பிரதேச மக்களுக்காக இன்று                ( 21/06/2014  )நற்பிட்டிமுனை இளைஞர்களினால் நிதி சேகரிப்பதை  படத்தில் காணலாம் .