சனி, 15 அக்டோபர், 2011





widgeo.net
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ்
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் பிரதிமேயராக சட்டத்தரணி  நிசாம் காரியப்பரும் தெரிவுசெய்யபட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் அறிவித்துள்ளார்.
03.10.1974 இல் பிறந்த கலாநிதி  சிராஸ் மீராசாஹிப்  மர்ஹூம். அபூபக்கர்மீராசாஹிப் உதுமாங்கண்டு பல்கீஸ் தம்பதியரின் மூன்றாவது புதல்வராவார்.

தனது ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தில் ஆரம்பித்த இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் சிறிது காலம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலும்  தனது கல்வியை தொடர்ந்தார். 
லண்டனில் தனது உயர்கல்வியை பயின்ற இவர் வியாபார முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களையும்  பெற்றுள்ளார். தனது உயர்கல்வியை பூர்த்திசெய்த பின்னர் கொழும்பு தெகிவளையில் மெட்ரோ பொலிற்றன் கல்லூரியை ஸ்தாபித்து கல்வித் துறைக்கு சேவையாற்றிவரும் இவர் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டதன் மூலம்
அரசியலில்பிரவேசித்தார்.

தனது முதலாவது பிரவேசத்தின் போதே மக்களின் மனங்களில் இடம்பிடித்த இவர் இத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்காக 16457  வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குப்பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலமாக கல்முனை மாநகரின் நான்காவது மேயராக தெரிவாகியுள்ளார்.

புதன், 12 அக்டோபர், 2011



widgeo.net

காலாவதியான டின் மீன்கள், உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

காலாவதியான டின் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நவீன சந்தை கடைகள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.
காலாவதியாகும் தினத்தை அடைய 60 வீத நாட்கள் உள்ள நிலையிலிருக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குக் குறைவான நாட்கள் உள்ள உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், காலாவதி திகதியை அண்மித்த பொருட்களையும் விற்கமுடியாது எனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
கொழும்பு உட்பட சில பகுதிகளில் உள்ள நவீன சந்தைகளில் புதிய டின் மீன்களுடன் காலாவதியான டின் மீன்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக வினவியதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர் இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான நவீன சந்தைகள் மற்றும் கடைகளை திடீர் சோதனை செய்து காலாவதியான பொருட்களை கைப்பற்றவும் தண்டம் அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார்.
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது காலாவதியான பொருட்கள் விற்றமை, விலைப் பட்டியல் தொங்கவிடாமை, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றமை என்பன தொடர்பில் பிடிபட்ட வர்த்தகர்களிடமிருந்து 10.4 கோடி ரூபா தண்டம் அறவிடப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011







  
ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் வியாழன் சத்தியப்     பிரமாணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான சத்தியப் பிரமாண வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற வுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சரிடம் இது பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர் தல் கடந்த 8ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 245 பேர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெறும் சத்தியப் பிரமாண நிகழ்வில் மாநகர மேயர்கள், பிரதி மேயர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

widgeo.net 

 

யார் கல்முனை மேயர் ? இன்று தீர்மானம்
 
 
கொழும்பில் உயர்மட்ட கூட்டம்



கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கூடும் கட்சியின் உயர் மட்டக் குழு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான
தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது.
இதனைத் தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உயர் குழுகூடி ஆராயவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கல்முனை மாநகர சபையின் மேயர் யார் என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 10 அக்டோபர், 2011






 Wishes for new Municipal Council Members

We Team ''Natpiddimunainet'' joins the people of Natpiddimunai and the people from Kalmunai municipality area in congratulating the new Municipal Council Members. This time Natpiddimunai achieved 3 seats. Mr. AHHM.Nafar (UNP), Mr. ML. Salideen(SLMC), Mr. CM. Mufeeth ( UPFA).

We hope these people's representatives will do their best to serve the people of Natpiddimunai and the entire Kalmunai municipality area.









ஏ. எச்.எச். எம். நபார்(ஐ.தே.க )
சீ.எம். முபீத் (ஐ.ம.சு.கூ )
 பறக்கத்(ஸ்ரீ .மு. கா. )
 ஏ.எம்.றியாஸ்-பெஸ்டர்  (ஐ.ம.சு.கூ ) 
நிசாம் காரியப்பர் (ஸ்ரீ .மு. கா. )

நற்பிட்டிமுனையில் இம்முறையும் மூன்று ஆசனங்கள்

நடைபெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்  முடிவுகளின்படி நற்பிட்டிமுனை சார்பாக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஏ .எச். எச். எம். நபார் 1616 வாக்குகளையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆசிரயர் எம்.எல். சாலிதீன்(சமீர் ) 1819 வாக்குகளையும் ,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  வேட்பாளர் சீ. எம். முபீத் 2133 வாக்குகளையும் பெற்று நற்பிட்டிமுனைக்கு இம்முறையும் மூன்று பிரதிநிதிகளை இவ்வூர் மக்கள் 3500 வாக்குகளை வைத்துக்கொண்டு வென்றெடுத்துள்ளனர்.

Results of Kalmunai Municipal Council Election - 2011

Name of the winners No. of Votes           Party             
AM. Mohamed Siras 16,457SLMC
Nizaam Kariyappar13,948SLMC
AM. Riyas6,018UPFA
AR. Ameer4,368SLMC
ZAH. Rahuman3,901UPFA
AM.Rakeeb3,509SLMC
ALM.Musthafaa2,999SLMC
MS. Umar Ali2,842SLMC
AM. Amirthalingam2,431TNA
AA.Basheer2,288SLMC
AM. Barakath2,251SLMC
Vivekaananthan2,238TNA
MIM. Firthous 2,149SLMC
CM. Mufeeth2,133UPFA
Alakenthiram2,153TNA
S.Jayakumaaran2,108TNA
ML. Salideen1,819SLMC
A.Nisaardeen1,802SLMC
AHHM. Nafaar1,616UNP