வியாழன், 29 செப்டம்பர், 2011

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

எதிர் வரும் 08ந்  திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில்  இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டி இடும் நற்பிட்டிமுனை அப்துல் கபூர் நௌசாத்  தலைமையில்  செயலகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ்  நற்பிட்டிமுனை மதிய குழு தலைவர் எம்.ஐ.நூர்முகம்மது.,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஐ.எல்.ரவுப்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

நடைபெற உள்ள 23 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 29 ஆம் திகதியும் நாளை 30 ஆம் திகதியும் நடைபெற உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவிக்கின்றது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு அலுவலக நேரங்கள் பயன்படுத்தப் படும் எனவும், தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றைச் சேர்ந்த ஒவ்வொரு அபேட்சகருக்கு அந்நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என தேர்தல்கள் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்குப் பதிவு செய்ததன் பின்னர் அன்றைய தினத்திலேயே அவை தபாலிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
தபால் மூல வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்பு மற்றும் சீ. எம். வீ. ஈ. ஆகிய அமைப்புக்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார பணிகள் அனைத்தும் முடிவடைதல் வேண்டும் எனவும், அதன் பின்னர் SMS தகவல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் செயலக உயர் அதிகாரி வலியுறுத்தினார்.

புதன், 28 செப்டம்பர், 2011

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு தினம்

(ed;wp Kalmunai News)


cs;Suhl;rp khfhz rigfs; mikr;ru; A.L.M.mjhTy;yhtpd; jiyikapyhd Njrpa fhq;fpu]; Vw;ghl;by; fle;j nts;spf;fpoik
ku;`Pk; M.H.M.m\;ug; epidT jpdKk; Fu;Md; jkhk; itgtKk; ew;gpl;bKidapy; eilngw;wJ. fy;Kid khefu rigf;fhd Ntl;ghsu; A.G.M.nesrhj; jiyikapy; ,lk;ngw;w itgtj;jpy; 
Mapuj;Jf;Fk;Nkw;gl;ltu;fs; fye;Jnfhz;ldu;. ku;`Pk; m\;ug; 
vkf;F fhl;ba topiambnahw;wp Njrpafhq;fpu]; gazpf;fpwJ mjdhy;
 ve;jnthU tplaj;jpYk; ehk; Njhw;Wg;Nghdjpy;iy Njrpa fhq;fpu]; jiytu; m\;ug;gpd; epidT epfo;Tfis,tUle;NjhWk; jpl;lkpl;L rpwg;ghf nra;J tUfpd;wJ. 
vd mq;F ciuahw;wpa mikr;ru; mjhTy;yh njuptpj;jhu;.
 ,e;epfo;tpy; fpof;F khfhz mikr;ru; M.S.cJkhnyg;ig khfhzrig cWg;gpdu;                   
 M.L.Jy;fu; eaPk; cl;gl ew;gpl;bKid Njrpa fhq;fpu]; kj;jpa FO mq;fj;jtu;fs; kf;fs; vd gyUk; fye;J nfhz;ldu;

சனி, 24 செப்டம்பர், 2011

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தலையை மூடிய நிலையில், அடையாள அட்டை பெற புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் இதற்கு முன் அனுமதி மறுத்திருந்தது. தலைமுடி தெரியும் நிலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் தலைவர்கள், அரசியல் வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தொப்பியை அணிந்த நிலையில் அடையாள அட்டை பெற அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றோர் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதன் போதே, முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் அடையாள அட்டைக்கான படம் பிடிக்க அனுமதி பெற்றுத்தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.
இனிமேல் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில், நெற்றியோ, காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011



ஹிமாயுன் சிம்ஹாருக்கு வாழ்த்துக்கள்!




ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நற்பிட்டிமுனை மாணவன்அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடம்

ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நற்பிட்டிமுனையை  சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 190  புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தில்  இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
 
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த இம்மாணவன் நற்பிட்டிமுனை அப்துல் சதார்- நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
                                                              ஹிமாயுன் சிம்ஹார்
இவருக்கு  நற்பிட்டிமுனைநெற் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

சோரம் போகும் அரசியலிலிருந்து விடுபடுவோம் 
 பேரம் பேசும் அரசியலை வென்றெடுப்போம்
நடை பெற இருக்கின்ற 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை கல்முனை மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியில்  நான்காம் இலக்கத்தில் நற்பிட்டிமுனை சார்பாக போட்டி இடுகின்ற இளம் துடிப்பு ஏ. எச். எச். எம். நபார் நேற்று ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில்
  • இனியும் நாம் தகுதிமிக்க பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுக்க வேணுமென்றும் 
  • இக் கிராமத்தின் கல்வி,விளையாட்டு  என்பனவற்றினை  மேம் படுத்த வேண்டுமென்றும் 
  •   குடி நீர் பிரச்சினையை சீர்செய்ய வேணுமென்றும்
  •  அயலவக் கிராமங்களைப் போன்று நமது கிராமமும் வளர்ச்சி பெற  வேண்டுமென்றும்
  •  சந்தைக் கட்டிடத்தினை விற்பனைக்கு ஏற்றாற்போல் திருத்த  வேண்டுமென்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

வியாழன், 1 செப்டம்பர், 2011

மின்னொளியில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி




 நற்பிட்டிமுனை ''ஒக்ஸ்போர்ட்'' விளையாட்டுக்கழகம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 02 .09 .2011 ம் திகதி மின் ஒளியிலான  கிரிக்கெட் போட்டியினை நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கத்தில் நடாத்தவுள்ளனர்.  இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர், எனவே இவ்வூர் மக்கள் ,விளையாட்டு வீரர்கள் தாங்களுக்கு ஒத்தாசை நல்குமாறு ''ஒக்ஸ்போர்ட்'' விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வீ.எம். மக்பூல்  கேட்டுக் கொள்கின்றார். அனைவரும் வருக! ஆதரவுதருக!  இச் சுற்றுப் போட்டியின் முடிவுகளை எமது இணையமான Natpiddimunainet இல் காணலாம்.