செவ்வாய், 11 அக்டோபர், 2011







  
ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் வியாழன் சத்தியப்     பிரமாணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான சத்தியப் பிரமாண வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற வுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சரிடம் இது பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர் தல் கடந்த 8ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 245 பேர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெறும் சத்தியப் பிரமாண நிகழ்வில் மாநகர மேயர்கள், பிரதி மேயர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

widgeo.net 

 

யார் கல்முனை மேயர் ? இன்று தீர்மானம்
 
 
கொழும்பில் உயர்மட்ட கூட்டம்



கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கூடும் கட்சியின் உயர் மட்டக் குழு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான
தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது.
இதனைத் தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உயர் குழுகூடி ஆராயவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கல்முனை மாநகர சபையின் மேயர் யார் என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.