செவ்வாய், 10 செப்டம்பர், 2013


முபாறக் அப்துல் மஜீட் ஒரு கோமாளி – ௮. இ. மு. கா. அம்பாறை இணைப்பாளர்

நவிப்பிள்ளையை சந்திக்க அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது  நகைப்பிற்கிடமானது. என்று கூறியிருக்கின்ற, “நானும் ஒரு கட்சி” என்று ஒரு கடிதத்தலைப்பை வைத்துக்கொண்டு நாளாந்தம் அறிக்கை விடுகின்ற முபாறக் அப்துல் மஜீட் ஒரு கோமாளியாகும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம். லத்தீப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தபோது,
நாம் மட்டுமல்ல, எந்தவொரு அரசியல்கட்சியும் முபாறக் அப்துல் மஜீதினுடைய அறிக்கைகளுக்கு பதில் எழுதுவதில்லை. ஏனெனில் கோமாளிகளுக்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. தனக்குயாரும் பதில் எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பகுத்தறிவிற்கு ஏற்புடையதா ? இல்லையா ? என்ற சிந்தனைகளுக்கு அப்பால் தனது தலைக்குள் ஓடுகின்ற எல்லாவற்றையும் எழுதுவதை அவர் வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான குழப்பவாதிகளால் குழப்பமடையக்கூடாது என்பதற்காக இதனை எழுதுகின்றேன்.
கிராமங்களில் “கண்ணால் கண்டது பொய் அகப்பைக்குறி பார்த்தது மெய்யா ? ” என்று நிஜத்தைப் பொய்யாக்கி பொய்யை மெய்யாக்க முனைபவர்களிடம் கேட்பதுண்டு.
நாங்கள் ஐக்கிய நாடுகள் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நேரம் பெற்றுக்கொள்ள முயற்சித்தோம் என்று கூறியது பொய்யாம். ஒரு கடிதத்தலைப்பில் கடிதம் எழுதியிருந்தாலே நேரம் கிடைத்திருக்குமாம்.
“அகப்பைக் குறியில் முபாறக் அப்துல் மஜீதிற்கு அவ்வளவு நம்பிக்கை.” (அவருக்குத் தெரிந்ததெல்லாம் கடிதத்தலைப்பில் அறிக்கை எழுதுவது மாத்திரம்தானே )
சரத்பொன்சேகா நேரம் ஒதுக்கிக்கேட்டும் நேரம் தரப்படவில்லை என்று கூறியிருந்தாரே, முபாறக் அப்துல் மஜீட் பத்திரிகை வாசிக்கவில்லையா ? அல்லது சரத்பொன்சேகாவும் பொய் கூறகின்றாரா ? அல்லது அவரிடம் கடிதத்தலைப்பு இல்லையா ?
நவிப்பிள்ளை தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர  இலங்கையில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியினரை சந்தித்ததாக முபாறக்  அப்துல் மஜீதினால் கூற முடியுமா?
அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியையும், குறித்த சில அமைச்சர்களையும் சில அதிகாரிகளையும்தான் சந்தித்தாரே தவிர ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லை.
அதேநேரம் எதிர்க்கட்சித்தலைவரை சந்தித்தாரே தவிர ஐக்கிய தேசியக் கட்சியை சந்திக்கவில்லை. என்பது புரியுமா ? முபாறக் அப்துல் மஜீதிற்கு இதெல்லாம் புரிந்தால் ஏன் இவ்வாறான அறிக்கைகளை விடப்போகின்றார்.
மடையர்கள்  பலவிதம் அதில் ஒரு வகையினர் “தனக்குத்தெரியாது ஆனால் தெரியாது என்று மட்டும் தெரியும்.” என்ற வகையினைச் சேர்ந்தவர்கள். மறு வார்த்தையில் சொன்னால் தான் ஒரு மடையன் ஆனால் தான் ஒரு மடையன் என்று அவனுக்குத் தெரியும். அவ்வாறானவர்களைத் திருத்தலாம். இரண்டாம் வகை “தனக்குத் தெரியாது. தெரியாதென்றும் தெரியாது.” அதாவது, தான் ஒரு மடையன் ஆனால் தான்  மடையன் என்று அவனுக்குத் தெரியாது. இவ்வாறானவர்களை திருத்துவது சற்றுக்கடினம். மூன்றாம் வகை “தனக்குத் தெரியாது ஆனால் தெரியும் என்கின்ற எண்ணம்.” மறு வார்த்தையில்  சொன்னால் தான் ஒரு மடையன். ஆனால் புத்திசாலி என்ற நினைப்பு. இவர்கள் அறவே திருத்த முடியாதவர்களாக கருதப்படுபவர்கள்.
உண்மை பேச விரும்புகின்ற ஒருவராக  முபாறக் அப்துல் மஜீட்  இருந்தால் ஆகக்குறைந்தது இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தில் நவிப்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலுக்கு பொறுப்பான அதிகாரியை தொடர்புகொண்டு விபரத்தை அறிய முற்பட்டிருக்கலாம். அதன் பின் அறிக்கை விட்டிருக்கலாம்.
அதுபோகட்டும் நவிப்பிள்ளை வருவதற்கு பல நாட்களுக்கு முன்பு நவிப்பிள்ளையிடம் மகஜர் கையளிக்கப்போவதாகக்கூறி பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விபரம் கோரியிருந்தார். அவ்வாறிருந்தும் அவர் ஏன் நவிப்பிள்ளையை சந்திக்கவில்லை.
அரசியல் கட்சிகளைத்தான் நவிப்பிள்ளை சந்திக்கவில்லை. ஆனால் முபாறக் அப்துல் மஜீதினுடையது வெறும் கடிதத்தலைப்புக்கட்சியே தவிர ஒரு பதியப்பட்ட அரசியல் கட்சியில்லை. எனவே, சிவில் சமூகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சந்தித்திருக்கலாமே. ஏன் அவ்வாறாகவாவது சந்திக்கவில்லை.இவர்களைப்போன்று அரசியல்கட்சியாகப் பதிவு செய்யாமல் அரசியலில் ஈடுபடுகின்ற வேறு சிலர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் சந்திக்கிறார்களே.
பரவாயில்லை அரசியல் கட்சியாக பதியாவிட்டாலும் கட்சி கட்சி என்று எழுதுகின்ற முபாறக் அப்துல் மஜீட் தனது கட்சியின் பெயரைச் சொல்லியாவது நேரம் ஒதுக்கிக் கேட்டிருந்தால் அப்பொழுது அவர்களின் பதில் என்னவென்று அவருக்குத் தெரிந்திருக்குமே!
“பொதுவாக சர்வதேச விவகாரங்களில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களே இராஜ தந்திரக்கருத்துக்களாக ஏற்றக்கொள்ளப்படும்.”  என்று இவரது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார். பாவம் “இராஜ தந்திரக் கருத்து” என்பதன் பொருள் இவருக்குப் புரிந்திருந்தால் குறித்த இடத்தில் அச்சொல்லினை பாவித்திருக்கமாட்டார். பரவாயில்லை அவர் சொல்வதன்படி பார்த்தால் அவரும் மக்கள் பிரதிநிதியில்லை. அவரது கட்சியிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. எனவே, அவரது கூற்றின்படி அவரது கருத்திற்கு நவநீதம் பிள்ளையிடம் எந்தப்பெறுமதியும் இல்லை. என்று தெரிந்திருந்தும் ஏன் மகஜர் கையளிக்கப்போகின்றோம் என்று பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் விபரம் கோரினார். மக்களை ஏமாற்றவா?
அது மட்டுமல்லாமல் நவநீதம்பிள்ளை சந்தித்த சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கருத்துக்கள் எல்லாம் எதுவிதப்பெறுமதியும் அற்றது என்றா முபாறக் அப்துல் மஜீட் கூறுகின்றார். அவ்வாறாயின் எதுவித பெறுமதியும் அற்றவர்களை சந்திப்பதற்காகத்தானா நவிப்பிள்ளை தனது நேரத்தில் பாதியை செலவிட்டார்.
அல்லது “ முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம்கள் எவரும்பேச முன்வரவில்லை. ” என்று நவிப்பிள்ளை கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது தங்களையும் உள்வாங்கிவிடும் என்பதால் இந்த வியாக்கியானமா ? பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா ?
அதேநேரம் நவிப்பிள்ளைக்கு தாங்கள் அனுப்பியதாகக் குறிப்பிட்டு ஊடகங்களில் முபாறக் அப்துல் மஜீதினால் மகஜர் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை அவருடைய வழமையான வெற்று அறிக்கை போன்றே இருந்தது.
தரவுகள் எதுவும் இருக்கவில்லை. வெறுமனே 24 பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே. அதை முபாறக் அப்துல் மஜீதா நவிப்பிள்ளையிடம் சொல்லவேண்டும் ? மாறாக மகஜர் என்பது தரவுகளைக்கொண்டது.
எனவே, 24 பள்ளிவாசல்களும் எங்கே அமைந்திருக்கின்றன ? எப்பொழுது தாக்கப்பட்டன ? எந்த வகையான பாதிப்புக்கள்  ஏற்பட்டன ? போன்ற விபரங்கள் உள்ளடக்கப்படுகின்றபொழுதுதான் அது ஒரு மகஜர் வடிவம்பெறும். ஒரு வெற்றுக்கடிதம் மகஜர் ஆகிவிடாது.
ஏன் எந்தப் பள்ளவாசலும் இவரை ஒரு பொருட்டாகக்கருதி பாதிப்பு விபரங்களை அனுப்பவில்லையா ? நாளாந்தம் அரசியல்வாதிகளைத்தாக்கி மட்டும் அறிக்கைவிடத்தெரிந்த ஒரு மௌலவியான இவரிடம் ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்களாவது இல்லையா ?
எனவே, முபாறக் அப்துல் மஜீட் அவர்கள் “ அரசியல் கோமாளியாகவே இருக்கப்போகின்றேன். ” என்று அடம்பிடித்தால் ஆகக்குறைந்தது துக்ளக் “சோ” வாக  இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக “வடிவேலாக வேண்டாம்” என்று வேண்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

widgeo.net

வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!

வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?


ஆம்! தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்  இடத்தைச் சேர்ந்த மரியா சொடெட்ஸி (49) என்ற பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அடிக்கடி நோயினால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், நோய்க்கான காரணம் வயிற்றில் இருக்கும் பாம்பாக இருக்கலாம் என்றும் இதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக பெருமளவு பணம் தேவைப்படும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவரால் டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள முடியததால் மதகுரு ஒருவரிடம் நாட்டு வைத்தியத்தை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து மரியா கூறுகையில்இ இந்த சிகிச்சையால் எனது பற்கள் அனைத்தும் இழந்து விட்டேன். எனது காதலனும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். எப்படியோ மதகுரு இன்றி இந்த பாம்பை நீக்க முடியாது  என்று தாம்  நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் நிறை மாதத்துக்கு முன்னரே அந்த பெண்ணின் வயிற்றில்  வளரும்  பாம்பை அந்த மதகுரு அழித்து விட்டால் போதும்.