திங்கள், 28 அக்டோபர், 2013


widgeo.net

ரூ.2000 நாணயத்தாள்கள்: எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் கோரிக்கை


2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் குறித்து கவனமாக இருக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு மில்லியன் ரூபாவுக்கு  சமவலுவான போலி இரண்டாயிரம் ரூபா தாள்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் மாலபேயில் கண்டுபிடித்தனர். இதனையடுத்தே மேற்கண்டவாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த போலி நாணயத்தாள்கள் ஏற்கெனவே புழக்கத்தில் விடப்பட்டுள்ளது எனவும் பி 67799159 இலக்கம் கொண்ட இந்த போலி நாணயத்தாள்கள் கைக்கு வந்தால் பொலிஸுக்கு அறிவிக்கும் படியும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013


widgeo.net


முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் சர்வதேச இயக்கங்கள்: ஹக்கீம்




முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச இயக்கங்கள் சில உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் அலுவலகம் நேற்று சனிக்கிழமை கண்டியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் சில பிரச்சினைகள்; கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் இவ்வாறான நெருக்கடிகளை உருவாக்குவதில் சிலர் மும்முரமாக உள்ளனர்.

எனக்கு தெரிந்த வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பின்னால் சில சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த பின் நாட்டில் அமைதி நிலவுகின்றதை சகிக்காத சில சக்திகள் நாட்டில் மீண்டும் அமைதியின்மையை உருவாக்குவதற்கு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

ஹலாலுக்கு எதிராக என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். நாங்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்கின்றோம். எங்கள் மத்தியில் ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் எங்களுக்கு பேசி தீர்த்துக்கொள்ள முடியும். அதனை விட்டுவிட்டு அதிரடியாக செயற்படுவது கவலைக்குரியவிடயமாகும். இதனால் நாட்டுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படும்.

ஜனாதிபதி இந்த நிலையை புரிந்து கொண்டு வெகுவிரைவில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நாங்கள் நம்புகின்றோம்.ஏனென்றால் இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம்களது மனம் வெகுவாக நொந்துள்ளது. கடந்த மாகாண சபை தேர்த்லின் போது இது நன்றாக பிரதிபலித்தது" என்றார்.

வியாழன், 24 அக்டோபர், 2013


widgeo.net

கல்முனை மேயரை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கல்முனை மாநகர சபை தேர்தல் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதனையடுத்து மேயரை நியமிப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. 

இதன்போது, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்கள் கல்முனை மேயராகவும் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இறுதி இரண்டு வருடங்கள் மேயராகவும் செயற்படுவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.

இந்த நிலையில் சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயராக நியமிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. 

இதனால் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரை கல்முனை மேயராக நியமிக்குமாறு கட்சி தலைவருக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே கல்முனை மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கல்முனைக்கு விஜயம் செய்து ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக சிராஸ் மீராசாஹிப் கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு குறித்து நீதி அமைச்சர் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. 

இதேவேளை, கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது புதிய உள்ளூராட்சி சட்டம் குறித்த விளக்கங்களை தேர்தல் ஆணையாளரிடமிருந்து கல்முனை மேயர் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கட்சியின் உத்தரவை மீறி தொடர்ச்சியாக மேயராக செயற்படுவதற்கு முடியுமா என்ற ஆலோசனைகளையும் கல்முனை மேயர் தேர்தல் ஆணையாளரிடமிருந்து பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்முனை மேயரினால் நிர்வகிக்கப்படும் மெட்ரோபொலிடன் தனியார் கல்வி நிறுவனத்தை தனியார் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கல்முனை மேயர் அழைப்புவிடுத்துள்ளதாக மேயர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே இந்த நிகழ்விற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் அழைக்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திங்கள், 21 அக்டோபர், 2013


widgeo.net

2015 இல் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த தீர்மானம்


2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பல தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் மூன்று தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்களை எந்தெந்த காலங்களில் நடத்துவ என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் தயாரித்த அட்டவணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. இந்த தேர்தல்களுக்காக அவ்விரு மாகாணங்களும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாண சபை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் கலைக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்தில் அந்த மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனி, 19 அக்டோபர், 2013


widgeo.net


பாராட்டு விழா

gpuhe;jpa nra;jpahsu;: MI.Nirose)

 மருதமுனை அல் - மானார் மத்திய கல்லூரியில் இன்று (19.10.2013) இடம் பெற்ற பாராட்டு விழாவின் போது  முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களுக்கு மருதமுனை மக்கள் சார்பாக இவ் விழாவின் தலைவர் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் காதர் இப்றாஹிம்  வாழ்த்துப் பாவினையும்- நினைவுச் சின்னத்தினை சமாதான நீதவான் ஜமால்டீன் என்போர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், பொருளாதாரத் துறை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அதிதிகளாக கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கருஜெயசூரிய , திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி, பைசல் காசிம் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் மற்றும் உறுப்பினர்களான ஏ.எல்.தவம், எம்.எல். ஜெமீல் மற்றும் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.












widgeo.net

செயலாளராக மாநாகர சபை  உறுப்பினர்  பரக்கத்துல்லாஹ் நியமனம்


 அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டம் அட்டளைசேனையில் இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராச்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு அதற்கான செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார் 

செவ்வாய், 15 அக்டோபர், 2013


widgeo.net

இலங்கை அமைச்சரவை கின்னஸ் சாதனை

 

 உலகின் மிகப்பெரிய அமைச்சரவை அமைந்துள்ள நாடு இலங்கை என கின்னஸ் சாதனைகளை அறிக்கையிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியின் பிரகாரம், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 52பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இதுவே, உலக நாடுகளின் மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடு என கின்னஸ் சாதனை புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
அது மாத்தரமன்றி, மேற்படி பதவிப்பிரமாணத்தையடுத்தும் அடுத்தடுத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என பலர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
புதிதாக மேலும் 9 பிரதியமைச்சர்கள் கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 




widgeo.net

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குப்பை கூளங்களை அகற்றும் நிகழ்வு நேற்று (13.10.2013 ) நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும்-MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் ஆலோசகருமான ஏ.எச்.எச்.எம்.நபார், சுகாதார பரிசோதகர் ஏ.கலீல், கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்  MANS சமூக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் ஜே.எம்.அயாஸ், தவிசாளர் ஜே.எம்..மிஹ்ளார் மற்றும் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஐ. நிரோஸ், அமைப்பாளர் எஸ். றுஸ்வின் உட்பட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





வியாழன், 10 அக்டோபர், 2013


widgeo.net

புதிய பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்.



பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் புதிய பிரதி அமைச்சர்களாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (10ம் திகதி) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தப்  பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல்  ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது.

தபால் சேவைகள் பிரதியமைச்சராக சனத் ஜயசூரியவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக லக்க்ஷ்மன் வசந்த பெரேரா பதவி பிரமாணம் செய்தனர்.

அவ்வாறே, தொழில் பிரதியமைச்சராக சரத் வீரசேகரவும், விவசாய பிரதியமைச்சராக வை.ஜீ.பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சராக ஹேமால் குணசேகரவும், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராக விக்டர் பெரேராவும் பிரதி கல்வியமைச்சராக மொஹான் லால் கிரேருவும், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகமவும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சரத் முத்துகுமாரனவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013


widgeo.net

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றவர்களில் 13 பேருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அதனடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த இருவருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகள் கிடைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்திற்கு பிரதியமைச்சர் பதவியொன்று வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி மாகாண சபைகளில் அமைச்சர்களாக பதவிவகித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. 

சனி, 5 அக்டோபர், 2013


widgeo.net

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி






கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில்   பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றான நற்பிட்டிமுனை கமு/கமு/ அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர புலமை பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் .கலீல் முஹம்மட் ஜெசான் -166 , சுவிக்கர் ரிஸ்கானா-164 ,ரவுப் பாத்திமா ருஜா 163 புள்ளிகள் பெற்றுள்ளனர்.அதிபர் அப்துல் கையூம்,பிரதி அதிபர் வீ .எம். ஷம்ஷம்  ,பகுதி தலைவர் அபுல் கலாம் தாசீம் உட்பட மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளான கே.குழந்தயும்மா ,திருமதி எஸ்.என்.சாதீகீன் ஆகியோரும் மாணவர்களுடன் காணப்படுகின்றனர் 

வெள்ளி, 4 அக்டோபர், 2013


widgeo.net

தென்கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் 41 பேர் கைது



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில்  பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41  பேரை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.

இவற்றை கருத்தில் கொண்டே மறு அறிவித்தல் வரை பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் வேண்டும் என நிர்வாகம் பணித்துள்ளது.

வியாழன், 3 அக்டோபர், 2013


widgeo.net

rpukjhd epfo;T
ew;gpl;bKid gpwtu; tpisahl;Lf; fofk; Vw;ghL nra;j rpukjhd epfo;T fle;j rdpf;fpoik (28.09. 2013) md;W fK/yhgpu; tpj;jpahyaj;jpy; ,lknw;wJ. ,r; rpukjhdk;  gpwtu; tpisahl;Lf; fofj;jpd; jiytu; vk;.I.Kdh]; jiyikapy; ,lk;ngw;wJ. ,jpy; fof cWg;gpdu;fSl;gl gyUk; fye;J nfhz;ldu;.