ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நற்பிட்டிமுனை அஷ்ரப் மைதானத்திற்கு பொது மக்களால் மண்ணிட ஏற்பாடு




கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை  அஷ்ரப் மைதானம்  விளையாட தகுதியற்ற நிலையில்  கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. மாரி காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கி சேற்று நிலமாகவும் ,இன்று குப்பைகள் கொட்டும் திடலாகவும்  காட்சியளிக்கின்றது.

இதனை பல் வேறுபட்ட அரசியல்வாதிகளுடனும், மந்திரிகளுடனும் மேன்முறை செய்தும் எதுவித பயனும் கிடைக்காமால் புறக்ககணிக்கப் பட்டதால் இன்று ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இம் மைதானத்திற்கு மண் கொட்ட முன்வந்துள்ளனர்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம்




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும்  முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச  அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ்  அறிவித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து  14ஆவது வருடத்தை  நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை  அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார  முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல்,  உட்கட்டமைப்பு  அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.