செவ்வாய், 24 மே, 2011

நற்பிட்டிமுனை பொது மைதானத்தின் இன்றைய நிலை


நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கம் கடந்த வெள்ளத்தினால் பாதிப்புற்று இன்று சேற்று நிலமாகவும் , குப்பை கூளங்கள் கொட்டும் இடமாகவும் , ஆற்று வாழை (கோவா) வளர்ந்த நிலையிலும் காணப் படுகின்றது . இதனால் இன்று விளையாட முடியாத நிலையில் இவ்வூர் வீரர்கள் விளையாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர், எனவே சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளுமாறு இவ்வூர் விளையாட்டுக் கழகங்களும் , ஊர் மக்களும் எமது இணையத் தளத்திற்கு தெரிவித்தனர். 

நற்பிட்டிமுனை அல்- அக்சா மஹா வித்தியாலய மாணவர்கள் சுற்றுலா பயணம்

கிண்ணியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவியல் கண்காட்சிக்கு 23 .05 .2011 திங்கட் கிழமை இப்பாடசாலை மாணவர்கள் மற்றும்  அதிபர், ஆசிரியர்கள் கண்காட்சியினை கண்டுகளிப்பதற்காக சென்றிருக்கின்றனர். என கல்லூரியின் அதிபர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

வெள்ளி, 13 மே, 2011

சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில்க . பொ . த  சாதாரண தர பரிட்சையில் இம்முறை 9A , 1B பெற்ற L . ஜெஸ்மின் நஹார் , க . பொ . த உயர் தர பரிட்சையில் 3A பெற்ற A . நளீபா மற்றும் புலமை பரிசில் பரீட்சையில் 175புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த A . அம்ரீ என்போரை பாடசாலையின் பழைய மானவர்சங்கதினர் கௌரவிக்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர், என கல்லூரியின் முதல்வர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.