வியாழன், 29 செப்டம்பர், 2011

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

எதிர் வரும் 08ந்  திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நற்பிட்டிமுனையில்  இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டி இடும் நற்பிட்டிமுனை அப்துல் கபூர் நௌசாத்  தலைமையில்  செயலகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ்  நற்பிட்டிமுனை மதிய குழு தலைவர் எம்.ஐ.நூர்முகம்மது.,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஐ.எல்.ரவுப்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு

நடைபெற உள்ள 23 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 29 ஆம் திகதியும் நாளை 30 ஆம் திகதியும் நடைபெற உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவிக்கின்றது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு அலுவலக நேரங்கள் பயன்படுத்தப் படும் எனவும், தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றைச் சேர்ந்த ஒவ்வொரு அபேட்சகருக்கு அந்நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என தேர்தல்கள் செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்குப் பதிவு செய்ததன் பின்னர் அன்றைய தினத்திலேயே அவை தபாலிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
தபால் மூல வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்பு மற்றும் சீ. எம். வீ. ஈ. ஆகிய அமைப்புக்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார பணிகள் அனைத்தும் முடிவடைதல் வேண்டும் எனவும், அதன் பின்னர் SMS தகவல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் செயலக உயர் அதிகாரி வலியுறுத்தினார்.