நற்பிட்டிமுனை

இலங்கை தீவின் கிழக்கு மாகாண,அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரமது கட்டிக் கொண்டதும் ,மனமது ஈன்று கொடுக்கும் பல புனிதர்கள் வாழ்ந்த பூமியாக திகழ்வதும் ,பொன் கொழிக்கும் மருதமும் முஸ்லிம் -தமிழ் இரு இனங்களும் ஒரு மொழியால் ஒன்று பட்டு இனிதே வாழ்கின்ற கிராமம்தான் ''நற்பிட்டிமுனை'' எனும் அழகிய கிராமம் .

இவ்வூர்  3500௦௦  வாக்காளர்களையும் ,சுமார் 6000 இக்கும் மேற்பட்ட சனத்தொகையையும் கொண்டிருக்கின்றது.   இக் கிராமம் பல்வேறுபட்ட நாமங்களை தன்னகத்தே கொண்டு காணப் படுவது முக்கிய அம்சமாகும் . அந்த வகையில் பசுக்களின் வாடிகள் பல காணப் பட்டதனால் போடிமார்களினால் நெய் விளையும் பூமி ''நெய்பட்டிமுனை'' என்றும் ,நன்றி உடையோரை நயமாய் நயக்க நாக் குறிதிக்காய் ''நாய்ப்பட்டிமுனை'' என்றும் ,நெல் விளையும் பூமி காணப் பட்டதாலும் ''நெற்பட்டிமுனை'' என்றும் , மாரி காலங்களில் ஊர்கள் பல வெள்ளத்தால் மூழ்கும் போது இவ் வூர் மட்டும் மிதக்கும் என்பதினால் ''நற்பிட்டிமுனை'எனவும் நெய்து கொண்டனர் அன்று ;இன்று மொத்தமாய் நல்முனையும் -நாய்முனையும் ,நெய்முனையும்-நெல்முனையும் முடிச்சிப் போட்டு முகவரி இட்டுக் கொண்டதுதான் நற்பிட்டிமுனை எனும் நயமிக்க ஊர் .  

அன்று இவ்வூரின் முதல் ஆசிரியராக மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் முதற் பெண் ஆசிரியராகவும் மர்ஹூம் மீரா உம்மா காணப்பட்டார்.அது மட்டுமல்ல இங்கு முதலாவது பல்கலைக்கழகம் சென்று பி. எஸ் சி  பட்டம் பெற்றவராக சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் அதிபரான எஸ். மரைக்கார் தம்பி காணப்படுகிறார். இவரே முதலாவது வெளிநாட்டு புலமை பரிசில் பெற்றவராகவும் விளங்குகின்றார். 

இருந்தாலும் இதற்குப் பின் இங்கு முதலாவது பீ.ஏ பட்டதாரியாக எ. கரீம் என்பவரும் கணப் படுகின்றனர். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும் இவ்வூர் தன்னகத்தே கொண்டுள்ளது . இவ்வாறு இருந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்களையும் (எம்.பீ .பீ.எஸ்) ,சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இன்னும் உலகிற்கு ஒரேயொரு சூரியன் போல் இக்கிராமத்தை நாடறிய வைத்த நாயகன் முன்னாள் பிரதேச செயலாளர் மர்ஹூம் ஏ. எல். எம் பளீல் ஆவார்.