செவ்வாய், 21 ஜூலை, 2015

சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது


சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடத் தவறுவோருக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படாது.

தேர்தல் போட்டியிடும் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை.

பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இவ்வாறு சொத்து விபரங்கள் பற்றிய ஆவணத்தை ஒப்படைக்கவில்லை.

வேட்பாளர் அடையாள அட்டை இல்லாத எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தல் திணைக்களத்தில் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

குறைந்த பட்சம் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் கூட பிரவேசிக்க இந்த வேட்பாளர்களுக்கு அனுமதியளிக்கப்படாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: