திங்கள், 19 ஆகஸ்ட், 2013


widgeo.net

கொழும்பு மாநகர சபையின் 6000 ஆவண கோவைகள் கனத்தை மயானத்தில் எரிப்பு

நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி மீது குற்றச்சாட்டு
விசாரணைக்கு மேயர் முஸம்மில் உத்தரவு

மோசடி, ஊழல் விபரங்கள் வெளியான பின்னர் 6000 பைல்கள் வரை மாநகர சபையின் உயர் மட்ட எழுத்து மூல அனுமதியின் பேரில் பொரளை கனத்தை பொது மயானத்தில் கடந்த 17 ஆம் திகதி இரவு தீயிட்டு நாசமாக்கப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
து பற்றி மாநகர முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக முறையான விரிவான விசாரணை நடத்துமாறு மாநகர முதல்வர் உத்தரவிட்டு, உள்ளக கணக்காய்வு பகுதி அதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித் தனர்.
கொழும்புமேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மாநகர சபை உறுப்பினர் களான எரிக் சந்திரசேன, ரோய் போகஹவத்த, மஹேந்திர தர்ஷன சில்வா, எம். மன்சில் ஆகியோர் தீ வைக்கப்பட்ட பைல் களை விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர். கணக்காய்வு விசாரணைக்காக இவை பாரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த தீ வைப்புச் சம்பவம் தாபனக் கோவைக்கு புறம்பானதென மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ வைக்கப்பட்ட 126 பைல்கள் தொடர்பாக மாநகர செயலாளர் அட்டவணை ஒன்றை மேயருக்கு வழங்கியுள்ளதாகக் கூறும் உறுப்பினர்கள், கனத்தையில் தீமூட்டப்பட்ட பயில்களின் எண்ணிக்கை 6000 க்கும் கூடுதலாகுமென அறிவித்துள்ளனர்.
செயலாளரின் அட்டவணை தவறானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கே. ஏ. 9959, ஜீடீ 2347, 253 7988 ஆகிய மாநகர சபை வாகனங்களில் 6000 பைல்கள் பொரல்ல கனத்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீ வைக்கப்பட்டன. மாலை 05 மணியளவில் கனத்தைக்குச் சென்றபோது வாகனத்தை நோக்கி புகை மூட்டம் எழுந்தது. பைல்கள் எரிந்து கொண்டிருந்தன.
50 – 60 வரையிலான எரிந்த பைல்களை காப்பாற்றினோம் என அவர்கள் தெரி வித்தனர்.
2010, 2011, 2012 ஆண்டுகளுக்கு உரி இந்த பைல்கள் 6000 ஊழியர்களின் விபரங்கள் கொண்ட பைல்களாகும்.
இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் தனிப்பட்ட விபரம் கொண்ட பைல்கள் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் பழைய - தேவையற்ற பைல்கள் அகற்றப்படுவது வழக்கம். இந்த முறை பைல்களை அகற்றும் போதே மாநகர சபை உறுப்பினர்கள் பிரச்சினையை உருவாக்கியுள்ளனர்.
உண்மை நிலையை கணக்காய்வுப் பிரிவினர் முடிவு செய்வரென மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மாநகர சபையின் ஆளுங் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலர், மயா னத்துக்கு விரைந்து தீக்கிரையாக்கப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை மீட்டு வந்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குரிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையிலிருந்து திருடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், அங்கிருந்து பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவரே இந்த ஆவணங்கள் தீக்கிரை சம்பவத்துடன் தொடர்புடையவரென மேற்படி மாநகர சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.              நன்றி- தினகரன் 

widgeo.net

நாளை முதல் வகுப்புக்கள் நடத்த தடை!

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு- தனியார் வகுப்புக்களை நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நேரமும் இருக்க வேண்டும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் க. பொ. த. சாதாரண- உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினத்திலிருந்து 05 தினங்களுக்கு முன் இருந்து பரீட்சைகள் முடிவும் வரையிலான முழுக் காலத்தில் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு துணை வகுப்புக்களை அமைத்தல் விரிவுரை கருத்தரங்கு செயலமர்வு- மாதிரி வினாபத்திரம் அச்சிட்டு விநியோகித்தல் போன்றவை வர்தமானி மூலம் தடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காலத்துக்குப் பொருத்தமானதென சிறுவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.