செவ்வாய், 22 நவம்பர், 2011

பட்ஜெட்-2012; அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் பல சமூக நலத்திட்ங்கள்.


நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார அபிவிருத்தியின் பயன்களை மக்களுக்குக் கொண்டு செல்லுவதையும், வலுவான துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகளையும் உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்றுப் பிற்பகல் சுபநேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்ற
ரீதியில் 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த உரையின்போது அவர் தெரிவித்த முன்மொழிவுகளில் முக்கியமானவைகள் வருமாறு,
அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு
சகல அரசாங்க ஊழியர்கள் மற்றும் படை வீரர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவிநிலையல்லாத தரத்தினருக்கு இந்த அதிகரிப்பு 2012 ஜனவரியிலிருந்து வழங்கப்படும். பதவிநிலை அலுவலகர்களு க்கான சம்பளம் 2012 ஜனவரியிலிருந்து 5 சதவீதமும், மிகுதி 5 வீதம் 2012 ஜூலையிலிருந்தும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
ஓய்வூதியம் அதிகரிப்பு
2004க்கு முன்னர் இளைப்பாறியவர்க ளுக்கு மேலதிகமாக மாதாந்தக் கொடுப்பனவு 1000 ரூபா வழங்கப்படும். 2004-2006 காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கு 500 ரூபாவும் வழங்கப்படும். இக்கொடுப்பனவில் 2012 இல் ஜனவரியில் அரைவாசி யும் மற்றைய அரைவாசி 2012 ஜூலை யிலிருந்து வழங்கப்படும்.
சமுர்த்தி குடும்பங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
குறைவருமானம் பெறும் சிறிய குடும் பங்களுக்கு வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவான 210 ரூபா முதல் 615 ரூபா வரையான கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், குறைந்த வரு மானம் பெறும் பொதுவான குடும்பங் களுக்கு வழங்கப்பட்டு வரும் 900 ரூபா வினை 1200 ரூபாவாக அதிகரிப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இலத்திரனியல் வீசா வசதிகள்
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலத்திரனியல் வீசா முறைமூலம் இல ங்கையில் 48 மணித்தியாலங்களுக்குக் குறைவான காலத்தினை செலவிடும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து எவ் வித வீசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
பஸ், லொறி மீதான பெறுமதி சேர்வரி நீக்கம்
சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் உயர்தரத்தினை உறுதிப்படுத்தும்வகையில் புதிய பேருந்துகளின் இறக்குமதியினை மேற்கொள்வதற்கு வசதியாக அதற்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரி நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொருட்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகள், டிரக்குகள் மற்றும் லொறி இயந்திரங்களுக்கான இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியையும் சுங்கத் தீர்வை யையும் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதேவேளை, பஸ்கள் மற்றும் லொறிகளுக்காகப் பயன்படுத்தப்படும் டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வையினை 50 வீதத்தால் குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை நாணய மதிப்பிறக்கம்
நாடு நாணயமாற்று வீதத்தினை ஸ்திர மான ஒரு நிலையில் இருக்கின்ற அதே வேளை, இலங்கையுடன் போட்டியிடும் அயல் நாடுகள் அவற்றினது நாணயமாற்று வீதங்களை மதிப்பிறக்கம் செய்துள்ளன. எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாணயமாற்று வீதத்தினை 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர் மகளிர் பாதுகாப்பு
சிறுவர்கள் மற்றும் பெண்களின் நன்மைக்காக நிறுவனங்களினால் நடத்தப் படும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் விரிவாக்கல் அத்துடன் மாவட்ட செயலாளர்களின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் தர்மப் பாடசாலைகள் என்பவற்றுக்கு உதவுவதற்காக 150 மில் லியனை ஒதுக்கீடு செய்வதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கு வலுவூட்டுதல்
வயது முதிர்ந்த கலைஞர்கள், பத்திரிகை யாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் காலத்துக்குக் காலம் வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவதன் மூலம் அவர்களது மரணச் சடங்குச் செலவீனங்களை ஈடுசெய்வதற்கு அவர்களது குடும்பங்களுக் கான உதவிகளை விரிவாக்குவதற்குத் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதிய மொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேநேரம், இந்த விசேட நிதியத்தினது வட்டியினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு மேலாக பங்களிப்பினை வழங்கியுள்ள சிரேஷ்ட கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர் களுக்கு மோட்டார் கார் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லாத கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.
கால்நடை அபிவிருத்தி
கால்நடை உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்கள் மீதான பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும். பால் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு அரசு மற்றும் தனியார் துறையினருக்கு வரிச்சலுகைகளும் வழங் கப்படும். பால் பண்ணையாளர்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு 3000 பசுக் களை இறக்குமதி செய்வதற்கும் நடவ டிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு விமான நிலையங்கள்
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விஸ்தரிப்பு, ஹம்பாந்தோட்டை சர்வதேச விமானநிலையம், பலாலி மற்றும் இரத் மலானை விமானநிலையங்களின் அபி விருத்தியுடன் கண்டி, நுவரெலியா, மட் டக்களப்பு, திருகோணமலை, ஹிங்கு ராங்கொட, சீகிரியா, அநுராதபுரம், இர ணைமடு போன்ற பிரதேசங்களில் உள்நாட்டு விமானநிலையங்கள் நிர்மாணிக் கப்படும், இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
வீடமைப்பு வசதி
நகர சேரிப் புறங்களில் வாழ்பவர்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50 ஆயிரம் வீடமைப்பு அலகுகளைக் கொண்ட பல்மாடித் தொடர் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை முடித்துக்கொண்டு நாடு திரும்புபவர் களுக்கும், மற்றும் தொழில்முயற்சி தொடர்பான முகாமைத்துவத் திறன் வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். அத்தகைய முன்னெடுப்புக்களை ஊக்கு விக்கும் வகையில் வருமான வழிகள் அனைத்தினையும் 5 வருட காலப்பகுதிக்கு வரிவிலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் மொழி ஆய்வு கூடங் களை அமைக்கவென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சிங் களம் மற்றும் தமிழ் மொழிகள் போதிக் கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே§ நரம், சமூக சேவைகள் ஊடாக மொழி ஆற்றல்களை பிரபல்யப் படுத்துவதற்கும், புதிய தொலைத் தொடர்பாடல் வசதிகளை அறிமுகப்படுத்துவதற்குமென நடமாடும் மொழியாய்வுக் கூடங்கள் அமைக்கப்பட வுள்ளன. இதற்கென 100 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முப்படை மற்றும் பொலிஸாரின் சமூகப் பாதுகாப்பு
சமூகப்பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் மூன்றாவது பிள்ளை கிடைக்கப்பெறுமாயின் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும். கடந்த வருடம் இக்கொடுப்பனவு முப்படையின ருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் படைவீரர்களின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபா படி கொடுப்பனவு வழங்கப்படும். ஊனமடைந்துள்ள படை வீரர்களுக்கு வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, சுயதொழில் வேலைவாய்ப்புக்காக ‘ரண விரு திவிநெகும’ திட்டத்தின்கீழ் விசேட கடன்திட்டம் அறிமுகப்படுத்தப் படும். இத்திட்டத்துக்கென 1700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சகல ஊனமுற்ற படைவீரர் களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கவென 14ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
முதியோருக்கான நல திட்டம்
எழுபது வயதுக்கு மேற்பட்ட முதிய வர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 300 ரூபா விலிருந்து 1000 ரூபாவரை அதி கரிக்கப்படும். ஏனையவர்களுக்கு 100 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதி கரிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதியோர் சுகாதார நலன் களைக் கவனிக்க வென குடும்ப மட்ட தாதியர் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
தளவைத்தியசாலைகளிலும், ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் முதியோருக்கென விசேட வார்ட்டுக்கள் அமைக்கப்படும். இதற்குரிய தங்குமிட வசதிகளும் மேம் படுத்தப்படும். இத்திட்டத்துக்கென 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக் கப்பட்டுள்ளது.
புராதன சமயஸ்தல பிரதேச மேம்பாடு
புராதன சமயத் தலங்களை சூழவுள்ள பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் வசதி மற்றும் பாதைகள் என்ப வற்றை அபிவிருத்தி செய்வதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சட்ட உதவி
குறைந்த வருமானம் பெரும் குடும்பங் களுக்கு சட்டரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சட்ட உதவி ஆணைக்குழு கிராம மட்டத்தில் சட்ட உதவி அமர்வுகளை நடாத்தி வரு கின்றது. இந்நடவடிக்கை வருமானம் குறைந்த குடும்பங்களுக்குப் பெறும் நிவாரணமாக உள்ளது. இதற்கென 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தண்டப் பணத்தை செலுத்த முடியாத வர்களாவர். அவர்களின் தண்டப் பணத்தை செலுத்தி அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் யோசனை முன்வைத்துள்ளேன்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து நாம் வெற்றியடைந்துள்ளோம். அதனால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், அவற்றை புனர்வாழ்வு நிலையங்களாகவும், திறந்தவெளி முகாம் களாகவும் மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கின்றேன்.
அரிசி ஏற்றுமதி வலயங்கள்
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் ரஜ ரட்ட ஆகிய நான்கு பிரதேசங்களில் அரசி ஏற்றுமதி வலயங்கள் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி, விதை நெல் மேம்பாடு மற்றும் விரிவாக்கல் என்பவற்றை ஊக்குவிக்கவென ஆரம்ப முதலீடாக 200 மில்லியன் ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.
அரசி ஏற்றுமதி வலயங்களில் நவீன அரிசி ஆலைகளை அமைக்க முன்வரு வோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
குடிநீர்
தற்போது நடைபெற்றுவரும் குடிநீர் கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுமென 33 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சகல மாகாணங்களிலும் வளர்ச்சியடைந்துவரும் சிறு நகரங்களில் 55 குடிநீர் திட்டங்கள் செயற்படுத்தப்படும். இதற்கென 3200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் குடிநீர் வீணாவதையும், கசிவதையும் 48 சத வீதத்திற்குக் குறைப்பதற்கும் 680 மில்லி யன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானத்தில் இடம்பெற்றது


இன்று காலை இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கினும் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக அம்பாறை விமானப் படைத் தளத்தை வந்தடைந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையில் விமானத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதில் கல்முனை மாநகரின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரயாடியதாகவும், பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கின் அவரது
அம்பாறைக்கான விஜயத்தின் போது கல்முனை மாநகரத்திற்கும் வருகைதரவுள்ளதாகவும் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் எமது  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.






இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும்     க. பொ.த. சாதாரண மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
 
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை நற்பிட்டிமுனை அல் அக்சா  மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம். சாலித்தீன் ( சமீர்) ஆசிரியரின் வழிகாட்டலில் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் அவர்களின் ராஜேஸ்வரன் கன்ஸ்ரக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில்   நற்பிட்டிமுனை-EEA (Extreme  Education Association  ) இன் 6 வது வருட பூர்த்தியினை  முன்னிட்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடங்களில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை கொண்டு நடாத்தப்பட்ட  இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண  நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.சாலித்தீன் ( சமீர்), பாடசாலை அதிபர் எம்.எல்.கையும்,  பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன்  ஆசிரியர் ஏ. அஸ்வாறுல் நிமைரி , மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.கைசர்,  எச்.எம்.எம்.நிஸ்தான், ஆர்.ரீ.இஸட். சுசான், ஐ.எம்.உபைதுல்லாஹ், ஏ.எம்.யாசிர், எம்.எச்.எம்.சர்ஜுன் தாரிக்,ஏ.கே.சப்ராஸ், ஏ.எம்.ஜெஸீல், என்.எம்.ஜர்ஸான், ஏ.எல்.எம்.கைதர், எச்.எம்.ஹிஸாம் , ஜே. லாபிர்,  என்.எம்.இர்சான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.