ஞாயிறு, 22 ஜூன், 2014

பட்டமளிப்பு விழா



கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரியின் பைஸல் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் யு.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிப்பீட பீடாதிபதி அஸ்-ஷெய்க் ஏ.அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதியாகவும்  ஏனைய பிரதேச அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.மேலும், பட்டம்பெற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


வயலுக்குள் வீழ்ந்தது குளிர்பான லொறி




 இன்று மாலை 5.30 மணியளவில் (22.06.2014) அக்கரைப்பற்றிலிருந்து குளிர்பான போத்தல்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிவந்து கொண்டிருந்த குளிர்பான லொறி அட்டப்பள்ள வீதியில் வைத்து பாதையை விட்டு விலகி   வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வாகன சாரதி உட்பட நான்கு பேர் காயத்திற்குள்ளாகி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.