ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி



நற்பிட்டிமுனையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நற்பிட்டிமுனை அல் அக்ஸா ம.வி.ல் கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா 172 புள்ளிகளைப் பெற்று இவ்ருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.
  
இம்மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.........

இம்மாணவின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

இது போன்று வேறு யாராவது நமது கிராமத்தில் சித்தி அடைந்திருந்தால் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மஹா வித்தியாலயத்தில்  கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா  இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்து இவ் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
இம்மாணவிக்கு எமது இணையம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

சனி, 27 செப்டம்பர், 2014

ரணில் தர முன்வந்த கரை­யோர மாவட்­டம், பிரதேச வாதத்தினால் தான் கிடைக்காமல் போனது!





SD82412
கடந்த 22ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­யன்று அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் தன்னை கரை­யோர மாவட்ட உரு­வாக்­கத்­திற்கு எதி­ரா­ன­வராகச் சித்­தி­ரித்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மு.கா.வின் செயலாளர் ஹஸன் அலி எம்.பி.க்கு எழுதிய கடிதம்
எனது பாரா­ளு­மன்ற உரைகள் அடங்­கிய ‘சோர்­வி­லாச்சொல்’ நூல் வெளி­யீட்டு வைபவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நடை­பெற்­ற­போது நான் நிகழ்த்­திய உரையில் கரை­யோர மாவட்டம் முஸ்­லிம்­களின் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு அல்­ல­வென்று தெரி­வித்­தி­ருந்தேன்.
எனது இக்­க­ருத்தை கரை­யோர மாவட்டம் தேவை­யில்­லை­யென்று நான் கூறி­யது போல திரி­வு­ப­டுத்­திக் ­காட்டி தனிப்­பட்ட முறையில் எனக்கு எதி­ராக ஓர் அர­சியல் கண்­டனத் தீர்­மானம் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதைக் கண்­டிப்­ப­தோடு இதனைக் கட்­சியின் கவ­னத்­திற்குக் கொண்டு வரு­கிறேன். இது சம்­பந்­த­மாக கட்சி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தங்­களை அன்­புடன் கோரு­கிறேன்.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலம் தொட்டு இன்­று­வரை கட்­சிக்குப் பெரும் மதிப்­ப­ளித்து தொடர்ச்­சி­யாக அட்­டா­ளைச்­சேனை மக்கள் அளித்­து­வரும் ஆத­ர­வுக்­காக அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு எனது அதீத மதிப்­பையும் கண்­ணி­யத்­தையும் எப்­போதும் செலுத்தி வரு­கின்றேன்.
முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு தென்கிழக்கு அலகே!
முஸ்­லிம்­களின் தேசி­யப்­பி­ரச்­சினை என்­பது பாது­காப்பும் காணிப்­பி­ரச்­சி­னை­யுமே என்­பதைக் கட்சிக் கூட்­டங்­களில் தொடர்ச்­சி­யாகக் கூறிவந்­துள்ளேன். இதுவே இப்­போதும் கூட எனது உறு­தி­யான நிலைப்­பா­டாக உள்­ளது. இதே­நேரம் வட, ­கி­ழக்கைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்­பது நிலத் ­தொ­டர்­பற்ற தென்­ கிழக்கு அலகே அன்றி வேறில்லை என்­பதும் என் நிலைப்­பா­டாகும்.
அஷ்ரப் இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் நிலத்­தொ­டர்­பற்ற தென்­கி­ழக்கு அல­குதான் முஸ்­லிம்­களைத் திருப்­திப்­ப­டுத்தும் தீர்­வாகும் என்­பதை மிகத்­தெ­ளி­வாகக் கூறி விட்டே மறைந்­துள்ளார். இவ்­வ­லகு விட­யத்தில் அவர் கொண்ட திருப்­திதான் 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­வினால் இனப்பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக முன்­வைக்­கப்­பட்ட புதிய அர­சியல் யாப்­பினை பாரா­ளு­மன்றில் முன்­மொ­ழிந்து மூன்று மணி நேர­மாக உரை­யாற்றக் கார­ண­மா­கி­யது.
தென்­கி­ழக்கு அலகைப் பெறு­கின்­ற­போது இதன் இன்­னொரு பெறு­பே­றாக கரை­யோர மாவட்டம் தானா­கவே சாத்­தி­ய­மாகும் என்­பதே அவரின் பார்­வை­யா­கவும் தர்க்­க­மா­கவும் இருந்­தது. முஸ்­லிம்­களின் அர­சியல் நிர்­வாக அபி­லா­ஷையில் முத­லா­வது அம்சம் தனி அலகு என்­ப­தாகும். இரண்­டா­வது அம்சம் கரை­யோர மாவட்­ட­மா­கவும் இருக்க முடியும் என்­பதே என் என்­றென்­றைக்­கு­மான நிலைப்­பா­டாகும்.
தென்­கி­ழக்கு அலகு என்­பது அம்­பாறை மாவட்­டத்தில் அமைந்­தி­ருக்­கிற சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­முனை ஆகிய முஸ்லிம் பெரும்­பான்மை தொகு­திகள் மூன்­றையும் மாத்­தி­ரமே உள்­ள­டக்­கிய ஓர் அலகு என்று அப்­பு­திய யாப்பில் மொழி­யப்­பட்­டி­ருந்­த­மையால் ஏனைய வட கிழக்கின் முஸ்லிம் பெரும்­பான்மைப் பகு­தி­களில் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்­பிய போதும் அவ்­வ­ல­குக்கு ஆத­ர­வ­ளித்­தவன் நான்.
அக்­கா­லத்தில் ‘அகண்ட தென்­கி­ழக்கு’ என்­பதைப் பரிந்­துரை செய்து அத்­த­லைப்பில் புத்­தகம் ஒன்­றையும் எழு­தி­யி­ருந்தேன். இப்­புத்­த­கத்தைத் தலைவர் அஷ்ரப் கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீ­டாக வெளி­யிட்­டி­ருந்தார். எந்த மூலை­யி­லா­வது ஒரு கைக்குட்­டை­ய­ள­வி­ன­தா­யினும் முஸ்லிம் மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஓர் அலகு அவ­சியம் என்­பதில் உறு­தி­யா­கவே இருந்தேன்.
வடக்கு, கிழக்­கிலே அம்­பா­றைக்கு வெளியில் இருந்த அன்­றைய பல முஸ்லிம் காங்­கிரஸ் பிராந்­தியத் தலை­வர்­களும் அப்­ப­குதி முஸ்­லிம்­களும் தென்­கி­ழக்கு அல­குக்கு எதி­ரான கருத்­த­ரங்­கு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தனர் என்­ப­தையும் இவ்­வி­டத்தில் நினைவுகூரு­கின்றேன்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­யாக இருந்தபோதும் தென்­கி­ழக்கு அலகை ஆத­ரித்­ததில் நான் இன­வாதம், மத­வாதம், பிர­தே­ச­வாதம் என்­பன கடந்தும் வாக்குவேட்டை அர­சி­யலைத் துறந்தும் செயற்­ப­டு­கின்றேன் என்­கிற மன நிறைவு எனக்­குண்டு.
ரணில் கரை­யோர மாவட்­டம் தர முன்வந்தார்!
2001-2004ஆம் ஆண்டு வரை­யான முஸ்லிம் காங்­கிரஸ் பங்­கா­ளி­யாக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கோரிக்­கைக்­க­மைய அர­சினால் கரை­யோர மாவட்­டத்­திற்­கான அங்­கீ­காரம் கிடைக்­கப் ­பெற்றபோது கரை­யோர மாவட்டச் செய­லகம் எந்த ஊரில் அமை­வது என்­கிற விட­யத்தில் உடன்­பாடு எட்­ட­ மு­டி­யாத பிர­தே­ச­வாதப் பிரச்­சி­னை­யினால் கைக்­கெட்­டிய மாவட்டம் வாய்க்­கெட்­டாமல் போன­மையையும் நினை­வூட்ட விரும்­பு­கிறேன்.
இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் தவிர்க்க முடி­யா­த­ப­டிக்கு பிராந்­தியப் பங்­கா­ளி­யாக இருக்­கின்ற இந்­தி­யாவின் அர­சி­யலில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இனப்­பி­ரச்­சி­னை­யினால் உற்­பத்­தி­யான ஆயுதப்போராட்­டத்தின் விளை­வாக உயி­ரி­ழந்த முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியின் இந்­திய காங்­கிரஸ் கட்­சியின் ஒரு தசாப்த கால ஆட்சி மாறி தற்­போது பார­தீய ஜனதாக் கட்­சியின் மோடி கைக்குச் சென்­றி­ருக்­கி­றது.
புதி­தாக ஆட்­சி­ய­மைத்­துள்ள பிர­தமர் மோடி இலங்­கையின் அரச தலை­வர்­களை விட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து சந்­தித்­துள்ளார். இச்­சந்­திப்பில் இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­காக இலங்கை அரசின் மீது தாம் அழுத்தம் பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாக தமிழ் தலை­வர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.
அரசு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­போடு பேசு­வ­தற்குத் தயார் என்று அறி­வித்­துள்­ள­மையும் பல முட்­டுக்­கட்­டைகள் இருந்த போதும் அதனைக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ள­மையும் முக்­கிய அர­சியல் நிகழ்­வாகும்.
இவ்­வா­றான ஒரு தேசிய அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரஸும் வட­, கி­ழக்கு வாழ் முஸ்­லிம்­களும் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் தமது பங்கு பற்­றிய கரி­ச­னையை முன்­னி­லைப்­ப­டுத்தல் வேண்டும். பேச்­சு­வார்த்­தையில் தனித்­தரப்பு, முஸ்லிம் பெரும்­பான்மை அர­சியல் அலகு ஆகிய முஸ்­லிம்­களின் இரண்டு பிர­தான கோரிக்­கை­களும் கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து நாம் செய்துவந்த அடை­யாள அர­சியல் தேய்­வினால் இன்று மங்கி ஒளி­யிழந்து போயுள்­ளன.
தமிழரின் உறுதியான போராட்டம்!
ஆனால், தமிழ் மக்கள் இவ்­வ­ளவு அழி­வு­களைச் சந்­தித்த பின்­னரும் “நாங்கள் தோற்­று­ விட்டோம். ஆனால் யாருக்கும் அடி­மை­யில்ல” என்று நிரூ­பித்த வண்ணம் உறு­தி­யாக தமிழ்த் ­தே­சிய அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தமிழ்த் ­தே­சிய இனத்­துவ அர­சி­யலின் புதிய போக்கில் போரா­ளிகள் என்ற பதம் போராட்­டக்­கா­ரர்கள் என்றும் பொடி­யன்கள் என்­பது மக்கள் என்றும் உருப்­ப­டி­யான வடிவ மாற்றம் பெற்­றுள்­ள­மையை முஸ்லிம் தேசிய அர­சியல் கவ­னப்­ப­டுத்தி மதிப்­ப­ளித்து செயற்­ப­டுதல் வேண்டும்.
இக்­கால கட்­டத்தில் எந்த வகை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்­பதை சுருக்கிக் கொள்­ளக்­கூ­டாது. விரைவில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­ற­வுள்­ளது. இப்­பேச்­சு­வார்த்தை நுனிப்புல் மேய்­வ­தாக இருக்­கக்­கூ­டாது.
அர­சு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் இணைந்த ஒரு தரப்­பாக கலந்து கொள்­வது அல்­லது உடன்­பாடு எட்­டிய நிலையில் தனித்­தனி தரப்­புக்­க­ளாகக் கலந்துகொள்ளும் சாத்­தியம் பற்றி ஆராய வேண்டும்.
ஒரு தரப்பை மறு தரப்பின் அர­சியல் அபி­லா­ஷையைத் தட்­டிப்­ப­றிப்­ப­தற்­கான கரு­வி­யாக அர­சுகள் பாவிக்கும் வாய்ப்­புண்டு. ஒட்­டு­மொத்த வட­, கி­ழக்கில் முஸ்லிம் தரப்பை தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கவும் தமிழ்த் தரப்பை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் பாவிக்கும் சாத்­தி­யப்­பாட்டை முறி­ய­டிக்கும் வகையில் சிறு­பான்மை தரப்பு கள வியூகம் அமைத்துச் செயற்­பட வேண்டும்.
தீர்வில் தமிழ் மக்­களின் அடிப்­படை அபி­லா­ஷை­யான வட, ­கி­ழக்கு இணைப்பில் முஸ்லிம் தரப்பு எவ்­வாறு உத­வலாம் என்றும் அவ்­வாறே முஸ்லிம் மக்­களின் அடிப்­படை அர­சியல் விருப்­பான நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் பெரும்­பான்மை அலகு என்­பதை எவ்­வாறு குறைந்­த­பட்­ச­மேனும் தமிழ்த் தரப்பு அங்­கீ­க­ரிக்­கலாம் என்­பது பற்­றியும் கலந்­து­ரை­யாட வேண்டும்.
கரை­யோர மாவட்­டத்­துக்­கான அங்­கீ­கா­ரத்­தையும் அனு­ச­ர­ணை­யையும் தமிழ் தரப்பு எவ்­வாறு மேற்­கொள்­ளலாம் என்­ப­தையும் கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் அமைய வேண்டும் என்­கிற அப்­ப­குதி தமிழ் மக்­களின் விருப்­பத்தை முஸ்லிம் தரப்பு எவ்­வாறு அங்­கீ­க­ரித்து சாத்­தி­யப்­ப­டுத்­தலாம் என்­ப­தையும் பற்றி கலந்­து­ரை­யாட வேண்டும்.
இந்த அடிப்­ப­டை­யான மூன்று விட­யங்­க­ளிலும் வட,­கி­ழக்கில் வாழும் சிறு­பான்மை மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இரண்டு தரப்­பு­க்களும் புரிந்­து­ணர்வு உடன்­பாட்­டிற்கு வரமுடியாவிட்டால் முஸ்­லிம்­களின் தனித்­த­ரப்பு நிலத்­தொ­டர்­பற்ற அர­சியல் அலகு, கரை­யோர மாவட்டம் ஆகிய விருப்­பு­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்­க­ளையும் வட,­கி­ழக்கு இணைவு, கல்­முனைத் தமிழ் பிர­தேச செய­லக அமைவு ஆகிய தமிழ் மக்­களின் விருப்­பங்­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் மக்­க­ளையும் வழமை போல சிங்­கள அர­சியல் தலை­மைகள் பயன்­ப­டுத்தும் வழ­மையை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யாது என்­பதைச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.
தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைத்து கண்டனத் தீர்மானம்!
மீண்டும் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் தீர்­மா­னத்­திற்கு வரு­கிறேன். இப்­பி­ர­தேச சபை உறுப்­பி­னர்கள் கரை­யோர மாவட்­டத்­திற்கு எதி­ரா­ன­வ­னாக என்னைக் காட்­டு­வ­தற்கு தீர்­மானம் எடுப்­ப­தற்குப் பதி­லாக, கரை­யோர மாவட்­டத்தின் அவ­சி­யத்தை அர­சுக்கு உணர்த்தும் வகையில் ஆத­ரவுத் தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­றி­யி­ருக்க வேண்டும்.
இப்­பி­ர­தேச சபை தவி­சா­ளரும் உறுப்­பி­னர்­களும் உண்­மை­யி­லேயே கரை­யோர மாவட்ட உரு­வாக்­கத்தில் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக இருப்பின் கிழக்கில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆட்­சியில் உள்ள எல்லா உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் ஆத­ரவுத் தீர்­மானம் நிறை­வேற்­று­மாறு வேண்­டுகோள் விடுத்­தி­ருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் உடன்­பாட்­டுக்கு வந்து வட­, கி­ழக்கில் கூட்­ட­மைப்பின் கட்­டுப்­பாட்டில் உள்ள எல்லா சபை­க­ளிலும் ஆத­ரவுத் தீர்­மானம் நிறை­வேற்ற முயற்­சித்­தி­ருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடத்திற்கு கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துங்கள் என்று கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
கரையோர மாவட்டம் என்பது வெறும் நிர்வாக மாவட்டமா அல்லது முழுமையான தேர்தல் நிர்வாக மாவட்டமா என்பதைப் பற்றி ஆகக்குறைந்தது அட்டாளைச்சேனை பிரதேச சபையிலாவது தெளிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் கட்சியின் அரசியல் அதியுயர் பீடமே அதனைச் செய்ய முடியும் என்பதையும் இவ்விடயம் சம்பந்தமாக கட்சி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தீர்மானம் தனிப்பட்ட முறையில் என்னை இலக்குவைத்து எடுக்கப்பட்டது என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.
எனவே, இவ்விடயம் சம்பந்தமாக என்னையும் மேற்படி சபை உறுப்பினர் களையும் அரசியல் உயர்பீடம் முன்னிலை யில் விசாரிக்க அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்ட மாநகர சபை தீர்மானம்!




Mayor




கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்டுவதற்கு மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்மொழிய அதனை ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரித்தனர்.
இந்த பீச் பார்க் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த தினமான எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதியன்று இதனைத் திறப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் நாமத்தை சூட்டுவதற்கும் அதனை அவரது பிறந்த தினத்தில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்ற மாநகர முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் குறிப்பிட்டார்.
இந்த சபை அமர்வில் வேறு பல விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.
சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்பு, கல்முனையில் புகையிரத ஆசனப் பதிவுக் காரியாலயம் அமைத்தல் மற்றும் சாய்ந்தமருது வரவேற்புக் கோபுரம் போன்ற விடயங்கள் தொடர்பில் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் பிரஸ்தாபித்தார்.
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானம் தொடர்பில் உறுப்பினர்களானஏ.எச் .எச்.எம் .நபார், எம்.எல்.சாலிதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பை கூளங்களைப் போடுதல், வீதிகளில் மண், கல் மற்றும் கட்டிடப் பொருட்களை குவித்து வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவைக்கை எடுத்து அவர்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடப்பட வேண்டியதன் அவசியம் பற்றி உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் வலியுறுத்திப் பேசினார்.
மருதமுனையில் ஒரு பீச் பார்க் அமைப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் ஏ.எம்.முஸ்தபா உரையாற்றினார்.
கல்முனையில் இருந்து இரவு நேர பஸ் சேவைகள் நடாத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் வலியுறுத்தினார்.
கல்முனையின் மேற்கு எல்லையான கிட்டங்கி உட்பட தமிழ் பகுதிகளும் நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பிரகாசமூட்டப்பட வேண்டும் என்று உறுப்பினர் எம்.ஜெயக்குமார் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய வறட்சி காரணமாக தமிழ் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி உறுப்பினர் கமலதாசன் விபரித்துக் கூறினார்.
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????

???????????????????????????????
???????????????????????????????
Aslam moulana (7)

ஹஜ்ஜுப் பெருநாளை ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட தீர்மானம்




 



துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல்ஹஜ்  மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நற்பிட்டிமுனை அஷ்ரப் மைதானத்திற்கு பொது மக்களால் மண்ணிட ஏற்பாடு




கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை  அஷ்ரப் மைதானம்  விளையாட தகுதியற்ற நிலையில்  கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றது. மாரி காலங்களில் வெள்ளத்தினால் மூழ்கி சேற்று நிலமாகவும் ,இன்று குப்பைகள் கொட்டும் திடலாகவும்  காட்சியளிக்கின்றது.

இதனை பல் வேறுபட்ட அரசியல்வாதிகளுடனும், மந்திரிகளுடனும் மேன்முறை செய்தும் எதுவித பயனும் கிடைக்காமால் புறக்ககணிக்கப் பட்டதால் இன்று ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இம் மைதானத்திற்கு மண் கொட்ட முன்வந்துள்ளனர்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம்




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும்  முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச  அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ்  அறிவித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து  14ஆவது வருடத்தை  நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை  அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார  முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல்,  உட்கட்டமைப்பு  அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

சனி, 28 ஜூன், 2014

கலந்துரையாடலை நடத்த நீதிமன்றம் அனுமதி






மெஸ்ரோ அமைப்பினால் நேற்று  வெள்ளிக்கிழமை(27) நடத்தப்படவிருந்த கூட்டத்திற்கு தடை விதிக்குமாறுகோரி கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை   கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனமான மெஸ்ரோ, 'முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்றையும்  துஆ பிரார்த்தனையையும்  வெள்ளிக்கிழமை(27) மாலை சாய்ந்தமருது  லீமெரிடியன்  மண்டபத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. 

இதில், ' எங்கள் மீதுள்ள எதிர்ப்புணர்வுகள் என்ன?,  எங்களை அழித்தொழிப்பதற்கு முன்வைக்ககப்படும் காரணங்கள் என்ன?,  இதில் எங்களுடைய பலவீனங்கள் என்ன?,  எதிரிகளின் பலங்கள் என்ன? என்பது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருத்துக்களை வழங்க இருந்தனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்நிலையில், இந்நிகழ்வை தடுப்பதற்கு மேலிடத்திலிருந்து வந்ததாக கூறப்படும் அழுத்தத்தை தொடர்ந்து கல்முனைப் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை(27) காலை வழக்குத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி   எம்.பி.முஹைடீன்,  வழக்கை தள்ளுபடி செய்து கலந்துரையாடலை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.  இதனடிப்படையில் கலந்துரையாடல்  திட்டமிட்டப்படி நடத்தப்படவுள்ளது.

ஞாயிறு, 22 ஜூன், 2014

பட்டமளிப்பு விழா



கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரியின் பைஸல் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் யு.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிப்பீட பீடாதிபதி அஸ்-ஷெய்க் ஏ.அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதியாகவும்  ஏனைய பிரதேச அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.மேலும், பட்டம்பெற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


வயலுக்குள் வீழ்ந்தது குளிர்பான லொறி




 இன்று மாலை 5.30 மணியளவில் (22.06.2014) அக்கரைப்பற்றிலிருந்து குளிர்பான போத்தல்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிவந்து கொண்டிருந்த குளிர்பான லொறி அட்டப்பள்ள வீதியில் வைத்து பாதையை விட்டு விலகி   வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வாகன சாரதி உட்பட நான்கு பேர் காயத்திற்குள்ளாகி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








சனி, 21 ஜூன், 2014

பாணந்துறை நோலிமிட் எரியூட்டல் இப்போது என்ன நடக்கிறது ?



நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இன்று (21) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு 
படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது .
முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக  சாம்பராக்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .











பெற்றோல் குண்டுத் தாக்குதல்
இன்று அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்த கட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும் எனத் அமைச்சர் ஹகீம் தெரிவித்தார்
 ரவூப் ஹக்கீம் அமைசச்ர் ரெஜிநோல் குரேஸ் தலத்திற்கு விஜயம்
நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பவத்தை பார்வையிட்டார். அத்துடன், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் – நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்
பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர்:-  ரெஜிநோல் குரே
அமைசச்ர் ரெஜிநோல் குரே – இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இனஜக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும் பாணந்துறையில் பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.என தெரிவித்தார் .
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர்
 ஸ்தலத்துக்குச் சென்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க  சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேல் மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர்   ஆகியோரும்  சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். அவர்கள் அவசர விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அரச இரசாயன பகுப்பாய்வாளரை இதில் ஈடுபடுத்திக் கொள்ளவும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்
விசேட அதிரடிப்படை நிறுத்தப் பட்டுள்ளது
பாணந்துறையில் விசேட அதிரடிப்படையினர்(எஸ்.டி.எப்)  அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர் . பாணந்துறை வைத்திய சாலைக்கு அண்மையிலுள்ள ஆடை வர்த்தக நிலையம் (நோ லிமிட்) கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்தே மேலதிக  விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பலின் நடமாட்டம் 
 கடந்த 17 ஆம் திகதி இரவு பாணந்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் குறித்த பகுதில் நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
நோ-லிமிட் மிகப்  பெரிய வியார ஸ்தாபணமாகும் 
சாம்பலாகியுள்ளது. நோலிமிட்டின் மிகப் பெரிய வியார ஸ்தாபணமாகும்  கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்  சொந்தக்; கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அதன் அருகில் உள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மணித்து கொடுத்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.
இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர்.
ஜனாதிபதியை முஸ்லிம் அமைச்சர்கள் அவரசமாக சந்திக்க ஏற்பாடு
தற்போது  பதுலளையில் இருக்கும் ஜனாதிபதியுடன்  விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த விசேட ஹெலிஹொப் டர்கள் மூலம்   முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகிறது . அமைச்சர் ஹக்கீம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

அளுத்கம மற்றும் தர்காநகர் போன்ற பாதிக்கப்பட்ட  பிரதேச மக்களுக்காக இன்று                ( 21/06/2014  )நற்பிட்டிமுனை இளைஞர்களினால் நிதி சேகரிப்பதை  படத்தில் காணலாம் .

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

சிவந்த நிலவை இன்று காணலாம்



சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வளிமண்டலத்தில் காணப்படும் எரிமலை துகள்கள் மற்றும் பிற வாயுக்களின் அளவை கொண்டு நிலவின் நிறம் மாறுபடும்.  சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆனது வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஏற்படும்.  அமெரிக்காவில் இன்று ஏற்படும் சந்திர கிரகணம் அதன் பின்பு வருகிற 2019ம் ஆண்டு தான் தெரியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இங்கிலாந்து மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தை நேரடியாக காண்பதற்கு வசதியாக திட்டமிட்டுள்ள நாசா நிறுவனம், அதற்காக நாசா டி.வி. மற்றும் நாசா.கவ் இணையதளம் ஆகியவற்றின் வழியாக அதனை பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.

இதனை தவிர்த்து ஜார்ஜியா மாகாணத்தின் கொலம்பஸ் மாநில பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கோகா கோலா அறிவியல் மையம் மற்றும் ஸ்லூ.காம் ஆகிய இணையதளங்கள் வழியாகவும் நேரடியாக சந்திர கிரகணத்தை காணலாம்.

சிரமதான நிகழ்வு



கல்முனை கல்வி வலயத்திற்கு  உட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா  வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் சிரமதான  நிகழ்வு நடைபெற்றது .
இந்  நிகழ்வில் அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் ,சமூக சேவை அமைப்புக்கள்  கலந்து கொண்டு  இந் நிகழ்வினை சிறப்பித்தனர்  .





வியாழன், 10 ஏப்ரல், 2014

மாபெரும் திவி நெகும விற்பனைச் சந்தை



பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன்  வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் - சிங்கள புத்தாண்டு மாபெரும் திவி நெகும விற்பனைச் சந்தை இன்று (10) காலை நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான  பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவு ம், மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் யூ.ஜி.எல்.அனுருத்த பியதாஸ மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவு ம் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து புத்தாண்டு மலிவு  விற்பனைச் சந்தையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுயதொழில் புரிபவர்களுக்கான நுண்கடன் திட்டத்தின் கீழ் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த புத்தாண்டுச் சந்தையில் இன மத வேறுபாடின்றி தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டு  பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். சமுர்த்தி திட்டத்தில் சுய தொழில் புரிவோரின் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஹசன் அலி



நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம்   
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சுக்கு ஒரு காலக்­கெடு வழங்க வேண்டும்.

தவ­றினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கட்சி பேத­மின்றி ஒரு மாத காலத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தை பகிஷ்­க­ரிக்க தீர்­மா­னிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் நாய­க­மு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

பொது பல­சேனா அமைப்பு அண்­மைக்­கா­ல­மாக மேற்­கொண்டு வரும் முஸ்­லிம்­களின் மீள்­
கு­டி­யேற்றம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­வது தொடர்பில் கொழும்பு புக்கர்ஸ்
மண்­ட­பத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

கடந்த திங்­கட்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைஸல் காசீம், பாரூக் முத்­த­லிப்­பாவா உட்­பட அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி தேசிய சூறா கவுன்ஸில் முஸ்­லிம்­களின் செய­லகம் முஸ்லிம் மீடியா போரம் ஸ்ரீலங்கா ஜமா அத்தே இஸ்­லாமி ஐக்­கிய முஸ்லிம் உம்மா, மஜ்­லிஸுல் சூறா கிரஸன்ட் பவுண்­டேஷன் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மற்றும் முஸ்லிம் இளைஞர் முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.

ஹசன் அலி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் முஸ்லிம் எம்.பி. க்களும் முஸ்லிம் இயக்­கங்­களும் அடிக்­கடி கூட்­டங்கள் கூடி கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு அறிக்­கைகள் விடு­வ­திலும் ஜனா­தி­ப­திக்கு மகஜர் சமர்ப்­பிப்­ப­திலும் எது­வித பிர­யோ­ச­னமும் இல்லை. வடக்கில் மாத்­தி­ர­மல்ல கிழக்­கிலும் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. வில்­பத்து பகு­தியில் முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு எதி­ரான பிர­சா­ரங்கள், நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ர­மல்ல ஏரா­ள­மான பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு சமூகம் முகம் கொடுத்­துள்­ளது.

இந்த பிரச்­சி­னை­களில் அவ­ச­ர­மாக உட­ன­டி­யாக தீர்­கப்­பட வேண்­டி­ய­வற்றை இனம் கண்டு அவற்றைத் தீர்க்க அர­சாங்­கத்­திற்கு காலக்­கெடு கொடுக்க வேண்டும். அரசு பிரச்­சி­னை­களை தீர்க்க தவறும் பட்­சத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பாரா­ளு­மன்­றத்தை ஒரு மாதத்­துக்கு பகிஷ்­க­ரித்து இந்த செய்­தியை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அரசு மிக பலம் பொருந்­தி­ய­தாக இருக்­கின்­றது. இந்தப் பலத்தை நாமே கொடுத்து வரு­கின்றோம். எமக்குள் ஏற்­பட வேண்­டிய கட்சி பேத­மற்ற ஒற்­று­மையே சமூ­கத்­துக்கு நன்மை பயக்கும். வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணுவ கெடு­பி­டிகள் அதி­க­ரித்­துள்­ளன.அம்­பாறை மாவட்­டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் காணி இரா­ணு­வத்­தி­னரால் கையேற்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் காணி சொந்த மக்­களின் கைக­ளி­லி­ருந்து பறிக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னாரில் புல்­மோட்­டையில் இவ்­வாறு நடந்­துள்­ளது.

நாங்கள் அடிக்­கடி கூட்­டங்கள் கூடி பேசிக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை. இந்த கூட்­டத்­துக்கு 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே சமு­க­ம­ளித்­துள்ளோம். நாம் தாம­தி­யாது செயலில் இறங்கா விட்டால் எம்­மீ­தான அடா­வ­டித்­த­னங்கள் தொடர்ந்த வண்­ணமே இருக்கும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற ஒன்­றியம் என்று ஒன்று இருக்­கின்­றது. இதனால் பய­னுள்ள செயற்­பா­டுகள் நடை­பெ­று­வ­தில்லை.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உரு­வாக்கும் பணி­யையே செய்­கின்­றது. முஸ்­லிம்­களின்
பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்­டத்­துக்குச் சென்று விட்­டது. இந்நிலையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

பொதுபலசேன, வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளதாக முன்வை த்துள்ள குற்ற ச்சாட்டுக்களை மறுத்து அது தொடர்பான தெளிவுகளை மகஜர் ஒன்றின் மூலம் ஜனா திபதியிடம் கையளிப்பதற்கும் நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டது.

வியாழன், 27 மார்ச், 2014

க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்




க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று கூறுகிறது.

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAMS என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் சுட்டிலக்கத்தை டைப் செய்து Dialog 7777 என்ற இலக்கத்திற்கும் Mobitel 8884க்கும் Airtel 7545க்கும் Hutch 3926க்கும் Etisalat 8888க்கும் அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். http://www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

உத்தியோக பூர்வ இணையத்தில் ஏப்ரல் 10 அளவில் வெளியாகலாம்  என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு





பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரணத் குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடுகேட்டு ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்தார்.

செவ்வாய், 25 மார்ச், 2014

மு.கா. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது: சிராஸ்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர்   சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக மக்கள் தனக்கு வழங்கிய அத்தனை அதிகாரங்களையும் தந்திரோபாயமாக பறித்தெடுத்துவிட்டு, வெறும் பாலைவனத்தில் பரிதவிக்க விட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர்,  அந்த பாலைவன வழியில் வந்த குதிரைமேல் ஏறி மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடர்வதாகவும் கூறினார்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் திங்கட்கிழமை (24) உத்தியோகபூர்வமாக சிராஸ் மீரா சாஹிப் இணைந்துகொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதும் பிரதேசவாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான விடயமல்ல. அது பல வருடங்களுக்கு முன்னராக வலுப்பெற்று வருகின்றது.

சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கைக் கனவை நிறைவேற்றுவதற்காகவே இறைவன் என்னை இவ்வாறு செய்துள்ளதாக  நான் திடமாக நம்புகிறேன். இப்பிரதேச மக்களின் அக்கனவை மிக விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய காங்கிரஸின் தலைமை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா எமக்கு பக்கபலமாக இருப்பாரொன்றும் நம்புகிறேன்.
மு.கா. கட்சிக்குள் வந்து எனது அபார முயற்சியின் காரணமாக அதிகளவான சேவைகளை வழங்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் அக்கட்சியின் தலைமைக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் எனது தீவிரமான அரசியல் பிரவேசம் ஒவ்வாமையாகவே இருந்து வந்தது. அதனாலேயே கட்சிக்கு நான்  ஒரு புற்றுநோயென்று விமர்சனம் செய்தார்கள்.

கல்முனை மாநகர சபைக்கு நான் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பிரதேசவாதங்களையும் அரசியல் பிரிவினைகளையும் சிலர் விதைக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் நான் மேயராக இருந்த காலப்பகுதியில் பட்ட கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் அளவே கிடையாது. இவ்வாறான பிரிவினைகளுக்கும் கருத்துக்களுக்கும் மு.கா. தலைமைத்துவமும் பக்கபலமாக செயற்பட்டு குழி பறிக்கும் நடவடிக்கையை காலாகாலமாக தமது அரசியல் சுய இலாபங்களுக்க்க செய்து வருகின்றது.
எனக்கு மக்கள்  04 வருடங்களுக்கான  ஆணையை வழங்கி இருந்தனர். எனது மேயர் பதவி இராஜினாமாவுக்கு முன்னர் நானும் எனது பிரதேச ஆதரவாளர்களும் பள்ளிவாசல்களின் தலைவர்களும் கால அவகாசம் கேட்டிருந்தோம். ஒரு நாள் கூட வழங்கமுடியாதென்று தெரிவித்த  அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் ஏற்பட்ட சந்திப்பொன்றில் என்னை கட்டி அணைத்து தயவுசெய்து உடன் இராஜினாமாச் செய்யுங்கள். இது எனது மானப் பிரச்சினையாகவுள்ளது. உங்களுக்கு கட்சியில்  அதிகாரங்களுடன் கூடிய பதவிகளை வழங்கவுள்ளேன்.  இவைகள் எல்லாம் வெறும் பொய்பச்சாகவும் கபடநாடகமாவுமே காணப்பட்டன' என்றார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா உரையாற்றுகையில்,
'அம்பாறை மாவட்டத்தின் மூத்த கிராமங்களில் ஒன்றாக சாய்ந்தமருது உள்ளது. ஒரு பிரதேசமானது காலத்தின் தேவை அறிந்து பிரிந்து செல்வதில் எவ்வாறான தவறுகளும் காணமுடியாது. கடந்த காலங்களில் இவ்வாறே தமது தேவைகளை உணர்ந்து ஒன்றாக இருந்து வந்த பல பிரதேசங்கள் தனி நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட்டு வருகின்றது.

தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பிரதேச வாதங்களை உடைத்தெறிவதில் கடுமையாக உழைத்து அதில் வெற்றி கண்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினார். ஆனால், இன்றைய மு.கா. தலைமை தமது அரசியல் சுய இலாபங்களுக்காக பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட கருத்துக்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி பிரதேச வாதங்களை வளர்த்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
அது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின்போது இனவாத கருத்துக்களை பேசி மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்டிவிடுகின்றார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது பள்ளியா? மஹிந்தவா? எனும் கோஷங்களை கிளப்பியதும் மக்கள் பள்ளி என்று வாக்களித்தார்கள். அந்த வெற்றியுடன் முதலில் மஹிந்தவிடம் சென்றவர் மு.கா.தலைவரே ஆகும். இப்படியான ஏமாற்று நாடகங்களை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மூன்றில் இரண்டு பகுதி முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே ஏனைய சமூகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை இவ்வாறான கருகிய அரசியல் இலபாம் தேடும் அரசியல் தலைமைகள் புரிந்து செயற்பட வேண்டும்.
இன்று சாய்ந்துமருது பிரதேசம் தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கையை விடுத்து நிற்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் எந்தவொரு சமூகமும் எந்த ஒரு பிரதேசமும் பாதிக்காதவாறு அதனை வழங்குவதற்கு என்னாலான நடவடிக்கைய மேற்கொள்வேன்' என்றார்.