செவ்வாய், 24 டிசம்பர், 2013

மதுபான கடைகளை நாளை மூடுமாறு உத்தரவு!





கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை மதுபான கடை கள் மூடப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சகல மது பான கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப் படுகிறது. கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத் திற்கு மதிப்பளிக்காது கடைகளை திறக்கும் மதுபான கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இவ்வாறு கடைகளை திறக்கும் நபர்களை கைது செய்ய விசேட தேடுதல் வேட்டை நடத்தப்பட உள்ளது.

ஏகே-47 ன் தந்தை மரணம்!





ஏகே-47ன் தந்தை என அழைக்கப்பபடும் மிக்கைல் கலஸ்னி க்கோவ் தனது 94 ஆவது வயதில் காலமானார். ஏகே- 47 ரக துப்பாக்கியை இரண்டாம் உலக யுத்த காலத்தில் வடிவ மைக்கத் தொடங்கி அதில் வெற்றி கண்டார். எனினும், தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல், 'எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, மிகவும் வருத்தமாக உள்ளது' என கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது.

மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். மிக்கைல் கலாசுனி க்கோவால் ஏ.கே-47 தானியங்கி துப்பாக்கி, 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி என இரு வகையாக உருவாக்கப்பட்டது.

ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏ.கே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிகள் 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத் தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத் துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலக ளவில் அதிகமாகப் பயன்படுத் தப்படும் துப்பாக்கியும் இதுவேயாகும். இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்ற பின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த துப்பாக்கியில் தோட்டாப்பெட்டி வெற்றாக இருக்கும் போது அதன் எடை 4.3 கிலோ கிராமாக இருக்கும். நிலையான மரப்பிடியுடன் கூடிய ஏகே-47 துப்பாக்கியின் நீளம் 870 மிமீ (34.3 அங்குலம்) ஆகும். விரிமடிப்புப் பிடியுடன் அதன் நீளம் 875 மிமீ ஆகும்.(34.4 அங்குலம்) மடிப்பு பிடியுடன் அதன் நீளம் 645 மிமீ (25.5 அங்குலம்) ஆகும். இந்த துப்பாக்கியின் சுடு குழல் 415 மிமீ (16.3 அங்குலம்) நீளமானதாம்.

இந்த துப்பாக்கிகளுக்கு 7.62ஒ39 மிமீ (ஆ43) தோட்டாக்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து தோட்டாக்களை நிரப்பாத நிலையில் அடுத்தடுத்து சுடவல்ல 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல மற்றும் ஒத்தியலக்கூடிய 40- சுற்றுப் பெட்டி அல்லது 75-சுற்றுகள் வெடிமருந்துப் பெட்டி,ஆர் பி கே பயன்படுத்தலாம்.

பிரதி முதல்வராக சிராஸ் மீராசாகிப்







கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (23.12.2013) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிதி முதல்வருக்கான அலுவலக அறையில் ஒரு  மேசையும் கதிரையும் காணப்பட்டது. பிரதி முதல்வரை சந்திப்பதற்காக வருபவர்கள் அமருவதற்கு கதிரைகள் இல்லாமல் இருந்தது. இதனால் வருகைதந்த  பொதுமக்கள் மற்றும் கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தனர்.

அத்தோடு “பிரதி முதல்வர்” என்ற பெயர்ப்பலகை அவ்வறைக்கு  வெளியில் பொருத்தப்படாமல் அவ்வறையின் மூலை ஒன்றில் கணப்பட்டது. அதுமாத்திரமன்றி அலுவலக பணிக்கான கனணி, கனணி  மேசை மற்றும் கதிரை, பிரின்டர், ஸ்கேனர் போன்ற பல  பொருட்களை அங்கு காணப்படவில்லை. பிரதி முதல்வருக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது முதல்வரின் அறிக்கையாக மாத்திரமே காணப்பட்டது.

“கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருக்கான வசதி வாய்ப்புக்களில் மாநகர சபையின் முதல்வர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது அபாண்டமானதாகும் எனவும் கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வருக்குரிய சகல வசதிகளும் வழங்கப்பட்டும்  அதனை இன்னும் உத்தியோகபூர்வமாக வந்து பொறுப்பெடுக்காமல் என் மீது வீண் பழி சுமத்தி ஊடகங்களுக்கு செய்தி வழங்கும் செயலானது அநாகரிகமானதாகும் எனவும் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கவலை தெரிவித்துள்ளதாக” செய்திகள் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வர் பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் மாநகர ஊழியர்களை சந்தித்து அவர்கள் தான் முதல்வராக செயற்பட்ட காலப்பகுதியில் உதவி ஒத்தாசை புரிந்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து கைலாகு கொடுத்தார்.




x