செவ்வாய், 24 டிசம்பர், 2013

ஏகே-47 ன் தந்தை மரணம்!





ஏகே-47ன் தந்தை என அழைக்கப்பபடும் மிக்கைல் கலஸ்னி க்கோவ் தனது 94 ஆவது வயதில் காலமானார். ஏகே- 47 ரக துப்பாக்கியை இரண்டாம் உலக யுத்த காலத்தில் வடிவ மைக்கத் தொடங்கி அதில் வெற்றி கண்டார். எனினும், தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல், 'எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, மிகவும் வருத்தமாக உள்ளது' என கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது.

மிகவும் வறிய ஒரு குடும்பத்தில், 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். மிக்கைல் கலாசுனி க்கோவால் ஏ.கே-47 தானியங்கி துப்பாக்கி, 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி என இரு வகையாக உருவாக்கப்பட்டது.

ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏ.கே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கிகள் 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத் தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத் துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலக ளவில் அதிகமாகப் பயன்படுத் தப்படும் துப்பாக்கியும் இதுவேயாகும். இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்ற பின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த துப்பாக்கியில் தோட்டாப்பெட்டி வெற்றாக இருக்கும் போது அதன் எடை 4.3 கிலோ கிராமாக இருக்கும். நிலையான மரப்பிடியுடன் கூடிய ஏகே-47 துப்பாக்கியின் நீளம் 870 மிமீ (34.3 அங்குலம்) ஆகும். விரிமடிப்புப் பிடியுடன் அதன் நீளம் 875 மிமீ ஆகும்.(34.4 அங்குலம்) மடிப்பு பிடியுடன் அதன் நீளம் 645 மிமீ (25.5 அங்குலம்) ஆகும். இந்த துப்பாக்கியின் சுடு குழல் 415 மிமீ (16.3 அங்குலம்) நீளமானதாம்.

இந்த துப்பாக்கிகளுக்கு 7.62ஒ39 மிமீ (ஆ43) தோட்டாக்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து தோட்டாக்களை நிரப்பாத நிலையில் அடுத்தடுத்து சுடவல்ல 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல மற்றும் ஒத்தியலக்கூடிய 40- சுற்றுப் பெட்டி அல்லது 75-சுற்றுகள் வெடிமருந்துப் பெட்டி,ஆர் பி கே பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை: