செவ்வாய், 21 ஜூலை, 2015

சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது


சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடத் தவறுவோருக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படாது.

தேர்தல் போட்டியிடும் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை.

பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இவ்வாறு சொத்து விபரங்கள் பற்றிய ஆவணத்தை ஒப்படைக்கவில்லை.

வேட்பாளர் அடையாள அட்டை இல்லாத எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தல் திணைக்களத்தில் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

குறைந்த பட்சம் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் கூட பிரவேசிக்க இந்த வேட்பாளர்களுக்கு அனுமதியளிக்கப்படாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சனி, 24 ஜனவரி, 2015

அதாவுல்லா பதுக்கிவைத்த 1500 துவிச்சக்கர வண்டிகள்



முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் அக்கரைப்பற்றில் பதுக்கிவைக்கப்பட்ட 1500 துவிச்சரக்கரவண்டிகள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் முயற்சியினாலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் இலஞ்சமாக வழங்குவதற்கு பதுக்கி வைக்கப்பட்ட பல பொருட்கள் தற்போது பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்கு இந்த துவிச்சக்கரவண்டிகளை மறைத்து வைத்திருக்கலாமென நம்பப்படுகிறது.

புதன், 21 ஜனவரி, 2015

எரிபொருட்களின் விலைகளில் சரிவு


இன்று நள்ளிரவு முதல்
அமுலுக்கு வரும்வகையில்
எரிபொருட்களின் விலைகள்
குறைக்கப்படவுள்ளதாக
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
பாட்டலி சம்பிக்க ரணவக்க
தெரிவித்துள்ளார்.
இதன்படி 150 ரூபாவாக இருந்த
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல், 33
ரூபாய் குறைவடைந்து 117
ரூபாவாகவும் 158 ரூபாவாக
இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன்
பெற்றோல், 30 ரூபாய்
குறைவடைந்து 128
ரூபாவாகவும்
விற்பனையாகவுள்ளது.
அத்துடன், 133 ரூபாவாக இருந்த
ஒரு லீற்றர் சுப்பர் டீசல், 23 ரூபாய்
குறைவடைந்து 110
ரூபாவாகவும் 111 ரூபாவாக
இருந்த ஒரு லீற்றர் டீசல், 16 ரூபாய்
குறைவடைந்து 95 ரூபாவாகவும்
விற்பனையாகவுள்ளது.
இதேவேளை, 81 ரூபாவாக இருந்த
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், 16
ரூபாய் குறைவடைந்து 65
ரூபாவாக
விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜனவரி, 2015

கிழக்கு முதலமைச்சர் : த . தே . கூ – மைத்ரி – ரணில் இன்று பேச்சுவார்த்தை

நாளைய தினம் கூடும் என
எதிர்பார்க்கப்படும்
கிழக்கு மாகாண சபையின்
முதலமைச்சர் பதவி தொடர்பில்
நிலவி வரும்
இழுபறி பற்றி கலந்துரையாட
தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
இன்று ஜனாதிபதி மற்றும்
பிரதமரை சந்திக்கவுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
எஞ்சியிருக்கும்
மாகாணசபை பதவிக்காலத்தில்
முதலமைச்சர்
பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசுடன்
இணங்குவதற்குத்பகிர்ந்துகொள்வதற்குத.தே.கூ
தயார் என அறிவிக்கப்பட்டுள்ள
போதும் அதில் முதல்
பாதி தமக்கே வழங்கப்பட
வேண்டும் என்பதில்
த.தே.கூ தரப்பு உறுதியாக
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இது தொடர்பில்
முடிவொன்றைஎட்டமுடியாநிலையேகட்சிக்குள்
காணப்படுவதாக அக்கட்சியின்
உயர்பீட உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் முதலமைச்சர்
பதவியையாருக்குவழங்குவதுஎன்பதுதொடர்பிலும்
அங்கு இழுபறி நிலவுவதும்
கிழக்கு மாகாண
சபை தேர்தலின்
போது மு.காவிடம்
ஆட்சியை ஒப்படைக்கவும்
த.தே.கூ தயாராக இருந்த
போதும் மஹிந்த அரசுடன் சமரசம்
செய்து கொண்டதனால்
த.தே.கூ –
மு.காகூட்டணிஅவ்வேளையில்
தடைப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான
உத்தியோகபூர்வ
வெளியிடவில்லையாயினும்தரப்புநிலைப்பாட்டைமு.கா
பல தரப்பட்ட ஊகங்கள்
தொடர்ச்சியாக
வெளிவந்தவண்ணமிருப்பது குறிப்பிடத் தக்கது

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க போட்டி

விரைவில் இடம்பெறவுள்ள
நடாளுமன்ற தேர்தலில் முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்கவின்
மகனான விமுக்தி குமாரதுங்க
போட்டியிடவுள்ளார் என தெரிய
வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியில் கம்பஹா மாவட்டத்தில்
அவர் போட்டியிடவுள்ளதாகவும்
இது தொடர்பில் தனது மகனுடன்
சந்திரிகா
கலந்துரையாடியுள்ளார் என்றும்
செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, நடைபெறவுள்ள
பொதுத் தேர்தல் தற்போது நடை
முறையிலுள்ள விகிதாசார
தேர்தல் முறையிலேயே
நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்
பின்னரே தேர்தல் முறையில்
மாற்றம்
கொண்டு வரப்படவுள்ளதாகவும்
அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சனி, 17 ஜனவரி, 2015

வாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்ட நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்





மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள 12ஆம் கொளனியைச் சேர்ந்த 45 வயதுடைய 11 பிள்ளைகளின் தந்தையான சம்சுதீன் நூறுமுஹம்மது என்பவர் ஆலையடி எம்-27ஆம் பிரதான வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டடிருந்த போது இன்று காலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சடலத்தினை தேடியவுடன் குறிப்பாக இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னர் ஆலயடி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாலத்தின் கீழ் மீட்கப்பட்டு சடலம் மத்தியமுகாம் வைத்திசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வேளாண்மைகளுக்கு பாய்ச்சுவதற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அவ்வாய்க்காலில் மீன்பிடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீர் திறந்து விடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வாய்க்காலில் குளிப்பதையும், மீன்பிடிக்க முயற்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மத்தியமுகாம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ரி.ஏ.டி.எஸ்.செனவிரத்ன பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.



அரசியலமைப்பு சீர்திருத்தப்பணி ஆரம்பம்; ரணில் தலைமையில் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்; ஹக்கீம், நிஸாம் பங்கேற்பு!


NAC

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்நேற்று  வெள்ளிக்கிழமை மாலை அலறி மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.சுமந்திரன், ஜனநாயக கட்சித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர கலாநிதி ஜயம்பதி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சமான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேசிய ஆலோசனை பேரவையின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பிரதமர் தலைமையில் மீண்டும் கூடி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பிலான வரைபுகளை தயாரிக்கவுள்ளது என அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், தலைவர் ஹக்கீம் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஆலோசனை பேரவை  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி



நற்பிட்டிமுனையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நற்பிட்டிமுனை அல் அக்ஸா ம.வி.ல் கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா 172 புள்ளிகளைப் பெற்று இவ்ருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.
  
இம்மாணவிக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.........

இம்மாணவின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......

இது போன்று வேறு யாராவது நமது கிராமத்தில் சித்தி அடைந்திருந்தால் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மஹா வித்தியாலயத்தில்  கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா  இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்து இவ் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
இம்மாணவிக்கு எமது இணையம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......