வியாழன், 27 மார்ச், 2014

க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்




க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று கூறுகிறது.

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAMS என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் சுட்டிலக்கத்தை டைப் செய்து Dialog 7777 என்ற இலக்கத்திற்கும் Mobitel 8884க்கும் Airtel 7545க்கும் Hutch 3926க்கும் Etisalat 8888க்கும் அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். http://www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

உத்தியோக பூர்வ இணையத்தில் ஏப்ரல் 10 அளவில் வெளியாகலாம்  என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு





பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரணத் குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடுகேட்டு ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்தார்.

செவ்வாய், 25 மார்ச், 2014

மு.கா. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது: சிராஸ்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர்   சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக மக்கள் தனக்கு வழங்கிய அத்தனை அதிகாரங்களையும் தந்திரோபாயமாக பறித்தெடுத்துவிட்டு, வெறும் பாலைவனத்தில் பரிதவிக்க விட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர்,  அந்த பாலைவன வழியில் வந்த குதிரைமேல் ஏறி மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடர்வதாகவும் கூறினார்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் திங்கட்கிழமை (24) உத்தியோகபூர்வமாக சிராஸ் மீரா சாஹிப் இணைந்துகொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதும் பிரதேசவாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான விடயமல்ல. அது பல வருடங்களுக்கு முன்னராக வலுப்பெற்று வருகின்றது.

சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கைக் கனவை நிறைவேற்றுவதற்காகவே இறைவன் என்னை இவ்வாறு செய்துள்ளதாக  நான் திடமாக நம்புகிறேன். இப்பிரதேச மக்களின் அக்கனவை மிக விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய காங்கிரஸின் தலைமை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா எமக்கு பக்கபலமாக இருப்பாரொன்றும் நம்புகிறேன்.
மு.கா. கட்சிக்குள் வந்து எனது அபார முயற்சியின் காரணமாக அதிகளவான சேவைகளை வழங்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் அக்கட்சியின் தலைமைக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் எனது தீவிரமான அரசியல் பிரவேசம் ஒவ்வாமையாகவே இருந்து வந்தது. அதனாலேயே கட்சிக்கு நான்  ஒரு புற்றுநோயென்று விமர்சனம் செய்தார்கள்.

கல்முனை மாநகர சபைக்கு நான் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பிரதேசவாதங்களையும் அரசியல் பிரிவினைகளையும் சிலர் விதைக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் நான் மேயராக இருந்த காலப்பகுதியில் பட்ட கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் அளவே கிடையாது. இவ்வாறான பிரிவினைகளுக்கும் கருத்துக்களுக்கும் மு.கா. தலைமைத்துவமும் பக்கபலமாக செயற்பட்டு குழி பறிக்கும் நடவடிக்கையை காலாகாலமாக தமது அரசியல் சுய இலாபங்களுக்க்க செய்து வருகின்றது.
எனக்கு மக்கள்  04 வருடங்களுக்கான  ஆணையை வழங்கி இருந்தனர். எனது மேயர் பதவி இராஜினாமாவுக்கு முன்னர் நானும் எனது பிரதேச ஆதரவாளர்களும் பள்ளிவாசல்களின் தலைவர்களும் கால அவகாசம் கேட்டிருந்தோம். ஒரு நாள் கூட வழங்கமுடியாதென்று தெரிவித்த  அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் ஏற்பட்ட சந்திப்பொன்றில் என்னை கட்டி அணைத்து தயவுசெய்து உடன் இராஜினாமாச் செய்யுங்கள். இது எனது மானப் பிரச்சினையாகவுள்ளது. உங்களுக்கு கட்சியில்  அதிகாரங்களுடன் கூடிய பதவிகளை வழங்கவுள்ளேன்.  இவைகள் எல்லாம் வெறும் பொய்பச்சாகவும் கபடநாடகமாவுமே காணப்பட்டன' என்றார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா உரையாற்றுகையில்,
'அம்பாறை மாவட்டத்தின் மூத்த கிராமங்களில் ஒன்றாக சாய்ந்தமருது உள்ளது. ஒரு பிரதேசமானது காலத்தின் தேவை அறிந்து பிரிந்து செல்வதில் எவ்வாறான தவறுகளும் காணமுடியாது. கடந்த காலங்களில் இவ்வாறே தமது தேவைகளை உணர்ந்து ஒன்றாக இருந்து வந்த பல பிரதேசங்கள் தனி நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட்டு வருகின்றது.

தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பிரதேச வாதங்களை உடைத்தெறிவதில் கடுமையாக உழைத்து அதில் வெற்றி கண்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினார். ஆனால், இன்றைய மு.கா. தலைமை தமது அரசியல் சுய இலாபங்களுக்காக பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட கருத்துக்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி பிரதேச வாதங்களை வளர்த்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
அது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின்போது இனவாத கருத்துக்களை பேசி மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்டிவிடுகின்றார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது பள்ளியா? மஹிந்தவா? எனும் கோஷங்களை கிளப்பியதும் மக்கள் பள்ளி என்று வாக்களித்தார்கள். அந்த வெற்றியுடன் முதலில் மஹிந்தவிடம் சென்றவர் மு.கா.தலைவரே ஆகும். இப்படியான ஏமாற்று நாடகங்களை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மூன்றில் இரண்டு பகுதி முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே ஏனைய சமூகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை இவ்வாறான கருகிய அரசியல் இலபாம் தேடும் அரசியல் தலைமைகள் புரிந்து செயற்பட வேண்டும்.
இன்று சாய்ந்துமருது பிரதேசம் தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கையை விடுத்து நிற்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் எந்தவொரு சமூகமும் எந்த ஒரு பிரதேசமும் பாதிக்காதவாறு அதனை வழங்குவதற்கு என்னாலான நடவடிக்கைய மேற்கொள்வேன்' என்றார். 

வெள்ளி, 21 மார்ச், 2014

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானம்







இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீது எதிர்வரும் 28ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னரும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு முறை கொண்டுவரப்பட்ட பிரேரணைகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சனி, 15 மார்ச், 2014

தயிர் விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது




அம்பாறை மாவட்டத்தில் பால் கொள்வனவு மேற்கொள்ளுமாறும், தயிர் விற்பனை செய்வதற்கு ஏற்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இவ் விடயத்தில் அச்சமோ, சந்தேகமோ கொள்ளத் தேவையில்லை எனவும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.சி.எம்.ஜூனைட் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோய்க் காரணமாக கடந்த (19) ஆம் திகதி முதல் மாடு, ஆடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மற்றும் உற்பத்தி பொருட்கள் நாட்டிலுள்ள 6 மாவட்டங்களில் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள உள்ளுர் கடைகளில் தடைசெய்யப்பட்டுள்ள உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் வைத்தியரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

சந்திரிக்கா, ஹக்கீம் ஆகியோரின் உண்மைகளை வெளியிடுவோம்: பொதுபல சேனா மிரட்டல்



20140313-192951.jpgமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை இன்று வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம்.
சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.

அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிறுவனம் ஒன்று இலங்கையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பௌத்தம் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாம் வழிப்பாட்டுத் தலங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்டே ஞானசார தேரர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 13 மார்ச், 2014

முஸ்லிம் காங்கிரஸ் பற்றி கருத்து வெளியிட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு அருகதை கிடையாது



முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி தவறான கருத்துகளை வெளியிடுவதற்கு பிரதி அமைச்சர் பைசா முஸ்தபாவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைப் பொருத்தமட்டில் நாங்கள் அனைவரும் எப்போதும் சமூகத்த்துடனும் கட்சியுடனுமே இணைந்திருப்போமே தவிர பைசர் முஸ்தபா போன்று பதவி ஒன்றுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டு அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியுடனேயே இணைந்திருப்பார்கள் என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

'இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஓர் உயர்ந்த நோக்கத்துடன் மறைந்த பெரும் தலைவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.

அன்று நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயுத கலாசாரம் தலை தூக்கியிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக
வழிமுறையில் அவர்களை நெறிப்படுத்தி- கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொண்டுஇ இந்த சமூகத்தை பாதுகாத்து வழிநடாத்திய பேரியக்கமே இந்த முஸ்லிம் காங்கிரஸாகும்

அன்று தமிழ் ஆயுதக் குழுக்களின் முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேலோங்கியிருந்த போது மறைந்த பெரும் தலைவர் எவ்வாறான ராஜதந்திரங்களுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையாண்டாரோஇ அவ்வாரே இன்று சிங்களப் பேரினவாதக் குழுக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான நகர்வுகளை தற்போதைய தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்து வருகின்றார்.

இந்த நாட்டில் இருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் சிங்களப் பேரினவாதம் பள்ளிவாசல்களையும் இஸ்லாம் மார்க்க விடயங்களையும் குறி வைத்து அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில்இ முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இப்பிரச்சினைககளை நிதானமாக கையாண்டு வருகின்றது.

தற்போது முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு வன்முறைகளை தூண்டி விடாமல் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் குரல் எழுப்பிஇ தீர்வுகளை வேண்டி நிற்கின்றது.

பைசர் முஸ்தபா போன்ற முஸ்லிம் அமைச்சர்கள்இ பிரதி அமைச்சர்கள் எல்லோரும் தமது பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருந்து கொண்டுஇ சமூகத்திற்கு துரோகமிழைத்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் பேரினவாத கெடுபிடிகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் இவர்கள் காட்டிக் கொடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்து ஐ.நா. வரை அது பிரஸ்தாபிக்கப்படும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையை ஜனாதிபதி கண்டித்து- எச்சரித்துள்ள நிலையில் அதற்கு பந்தாப்பிடிக்கும் வகையில் பைசர் முஸ்தபா கருத்துக் கூறியுள்ளார்.

அதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியுடனேயே இணைந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கும் விடயமானது அவர் போன்ற பதவிப் பேராசை பிடித்த கோழைகளுக்கே பொருந்தும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லி வைக்கின்றேன்.

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த சமூகத்திற்கோ கட்சிக்கோ துரோகமிழைக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அந்த சபைக்கான கட்சியின் குழுத் தலைவர் என்ற ரீதியில் மிகவும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற எமது கட்சிஇ அந்த ஆதரவை விலக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டால் ஒரு நிமிடம் கூட தாமதியாமல் அந்த ஆட்சிக் கூட்டில் இருந்து வெளியேறுவதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தயாராகவே இருக்கின்றோம். இதில் எம்மிடையே மாறுபட்ட நிலைப்பாடு கிடையாது.

கிழக்கு மாகாண சபையில் நாம் ஆளும் தரப்பில் இருக்கின்ற போதிலும் சமூக விடயங்களில் சுயாதீனமாகவெ செயற்பட்டு வருகின்றோம். இதன்போது ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாம் சமூகத்திற்கும் எமது கட்சிக்கும் ஒருபோதும் துரோகமிழைக்க முனையவில்லை.

அதற்குஇ 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை ஏற்று கிழக்கு மாகாண சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒரு நல்ல உதாரணமாகும்.. இதனை சமர்ப்பிப்பதிலும் நிறைவேற்றுவதிலும் மு.கா. உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று அரச தரப்பினருடன் போரிட்டு வெற்றி கண்டோம் என்பதை இங்கு ஞாபகமூட்டுகின்றேன். .

அப்போது இந்தப் பிரேரணையைக் கை விடுமாறு அரச உயர் மட்டத்தில் இருந்து எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் வந்ததுடன் ஆசை வார்த்தைகளும் காட்டப்பட்டன. ஆனால் நாம் அஞ்சவுமில்லை சலுகைகளுக்காக சோரம் போகவும் இல்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து எமது கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றே நாம் இங்கு அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம். அப்போது அந்த தீர்மானத்தில் நாங்கள் எவரும் முரண்பட்டுக் கொள்ளவில்லை. அது போன்றே விலகுவது எனத் தீர்மானித்தாலும் அதனை சமூகப்பற்றுடன் முழு மனதுடன் ஏற்று செயற்பட நாம் தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதை பைசர் முஸ்தபா போன்ற அரசின் அடி வருடிகளுக்கு மீண்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கின்றேன்' என்று ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவுக்கு எதிராக ஜெனிவாவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்



ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை (14) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமாகவுள்ள இந்தப்பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை நகர் ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட பள்ளிவாசல்கள், வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

திங்கள், 3 மார்ச், 2014

மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் கிளை கல்முனையில் திறப்பு




கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் முயற்சியினால் மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் கிளை கல்முனையில் திறக்கப்பட்டுள்ளது.(நகர மண்டப வீதி, கல்முனைக்குடி) இதன் கிளை சந்தைப்படுத்தல் முகாமையாளர் றினோஸ் ஹனீபா தலைமையில் திறப்பு விழா வெகுவிமர்சயாக இடம்பெற்றது. இதில் விஷேட அதிதிகளாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச் நவாஸ் மற்றும் மதுரை கமராசர் பல்கலைக்கழகத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் கே.எம் றிஸ்வி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  உயர்தர பரீட்சையில் இரண்டு பாடங்கள் சித்தியடைந்த மாணவர்கள் வீட்டில் இருந்தவாரே தமது பட்டப்படிப்பினை தொடர முடியும். தொடர்வுகள் 077 901 2004,077 923 8024,077 6575712