சனி, 28 ஜூன், 2014

கலந்துரையாடலை நடத்த நீதிமன்றம் அனுமதி






மெஸ்ரோ அமைப்பினால் நேற்று  வெள்ளிக்கிழமை(27) நடத்தப்படவிருந்த கூட்டத்திற்கு தடை விதிக்குமாறுகோரி கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை   கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனமான மெஸ்ரோ, 'முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்றையும்  துஆ பிரார்த்தனையையும்  வெள்ளிக்கிழமை(27) மாலை சாய்ந்தமருது  லீமெரிடியன்  மண்டபத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. 

இதில், ' எங்கள் மீதுள்ள எதிர்ப்புணர்வுகள் என்ன?,  எங்களை அழித்தொழிப்பதற்கு முன்வைக்ககப்படும் காரணங்கள் என்ன?,  இதில் எங்களுடைய பலவீனங்கள் என்ன?,  எதிரிகளின் பலங்கள் என்ன? என்பது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருத்துக்களை வழங்க இருந்தனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்நிலையில், இந்நிகழ்வை தடுப்பதற்கு மேலிடத்திலிருந்து வந்ததாக கூறப்படும் அழுத்தத்தை தொடர்ந்து கல்முனைப் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை(27) காலை வழக்குத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி   எம்.பி.முஹைடீன்,  வழக்கை தள்ளுபடி செய்து கலந்துரையாடலை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.  இதனடிப்படையில் கலந்துரையாடல்  திட்டமிட்டப்படி நடத்தப்படவுள்ளது.