வியாழன், 26 டிசம்பர், 2013

சுனாமிக்கு வயது ஒன்பது




ஆழிப் பேரலை சுனாமியாகப் பெயரெடுத்து உயிர்களைக் காவு கொண்டு இன்றுடன் 09 ஆண்டுகளை அடைந்துள்ளோம்.

எம்மோடு அன்றும் ஞாயிறு விடுமுறையில் துயில் விட்டெழுந்த எம் சொந்தங்கள் பலரை இழந்து இன்று கண்ணீர் மல்கின்றோம். மக்களின் மனங்களில் மறக்க முடியா நினைவுகளில் இதுவும் ஒன்று.....

அவர்களின் மறுமை வாழ்வுக்காக தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்திப்போம்.



பிரதேசவாதத்தை தூண்டும் ஷிராஸுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கல்முனை பொது அமைப்புக்கள்




கல்முனையை இனவாதிகளுடன் சேர்ந்து கூறுபோட முன்னால் மேயர் ஷிராஸ் துவேச வார்த்தைகளால்  பிரதேசவாதத்தை தூண்டும் விதத்தில் கல்முனை மக்களிடத்தில்  கோசம் எழுப்பியதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதவது,,,

மாநகர சபை வளாகத்தினுள் இடம் பெற்ற இவ் அசம்பாவிதமானது சிராஸின் பழி தீர்க்கும் நடவடிக்கையாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும் கல்முனை பிரதேச வாழ் மக்களால் உற்று நோக்கப்படுகின்றது.
கேவலம் பதவிக்காக தான் கொடுத்த வாக்கை கூட மீறிய அவர் சுயநல அரசியலுக்காக பிரதேசவாதத்தை தூண்டி பின்னர் தனது மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார் அதுவும் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமென்ற நோக்கமே தவிர மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை.
தற்போதைய நிலையில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்கட்சியுடனும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பச்சோந்திகள் சிலருடனும் சேர்ந்து அத்திட்டத்தை தோக்கடித்து முதல்வர் நிசாம் காரியப்பரை பதவியில் இருந்து தூக்குவதற்கு செய்த சூழ்ச்சியே இதுவாகும்.
இந்த வரவு செலவு திட்டம் தோக்கடிக்கப்படுமானால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம் என்ற கீழ்த்தரமான நோக்கமே தவிர வேறில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இது பெரும் சவால் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடருமாக இருந்தால் நயவஞ்சக சிராஸை  கட்சியில் இருந்து முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பது கல்முனை வாழ் மக்களின் வினயமான வேண்டு கோளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இவ்விடயத்தில் தலையிட்டு வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விட்டு அதை நடை முறைப்படுத்தவேண்டும் என்றும் பிரதேச வாழ் பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள்,கல்முனை வர்த்தக சம்மேளனம் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் மீன்பிடி வாடியும், டிப்பர் லொறியும் தீக்கிரை





சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன் வாடியொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேற்று (25) நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மீன் வாடிக்கு சொந்தக்காரரான பீ.எம்.அலியார் (றாசிக்) சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தீச் சம்பவத்தினால் மீன் வாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் டிப்பர் வாகனம் அந்த தீக்குள் தள்ளியும் விடப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மீன்வாடியினுள் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகின் இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு