கவிதைகள்

எது தவறு அன்பே ...?


உன்னைக் கேட்காமல் 
உன்னை நினைத்தது தவறா? 
இது -
தவறென்றால் அனுமதியின்றி 
உன்- உடலை உரசும் 
காற்றும் தவறு! 
பூவிடம் கேட்காமல் 
முத்த மழை பொழியும்
வண்டும் தவறு!
இயற்கையை ரசித்து
இரசிக்க எழுதிய 
கவிஞனும் தவறு!
கண்களை கேட்காமல் -வரும்
கனவும் தவறு!
இதை நீ புரிந்தால்
எது தவறென்று 
தெரியும் உனக்கு.    
                                                 நற்பிட்டிமுனை -சப்ரோஸ்







இறக்க முடியாத நினைவுகள் 


நான் -
என் தனிமையில் 
மகிழ்சியை தேடினேன் 
என் -ஆத்மா 
அவளை நெருங்கி 
நகர்ந்தது....
அப்போது என்னிதயம் 
ரகசியமாய் 
அவள் பெயர் சொல்லிற்று !

தொடர்ந்தேன்,
நகர்ந்தேன்-அவளின் 
நகைப்புடன்
இவ்வாறே சில 
இரவுகள்
இனிமையாய் போனது !

என்னிதயத்துடன் 
அவளிதயமும் -சேர்ந்து
அழுது கொண்டிருக்கும்
அந்த மெல்லிய 
இரவுகளில் !

அவள் 
வார்த்தைகளில் அழிந்தது 
வாலிபமும் , இருதயமுந்தான் 
ஆனால்.... 
கனமாகிப் போனது-என்
கண்ணீர் ! 

எங்கள் 
நினைவுகளில் 
வேர் பிடித்த போது
கிள்ளி எறிந்தனர்
கிறுக்கர்கள் சிலர் !

இப்போது 
என் நினைவுகள் 
அவளோடல்ல
இருட்டோடு 
இல்லறம் நடத்துகிறது !

இருந்தாலும்.... இருந்தாலும்
என்னிதயம்
என்றுமவள்
பெயர் சொல்லி 
துடித்துக் கொண்டிருக்கும் 
இறக்க முடியாத 
நினைவுகளுடன்.... 
                             நற்பிட்டிமுனை -சப்ரோஸ்









 

இரண்டு இதயம்

உன்னை-
ஒருமுறை பார்த்ததற்காகவா
அன்பே - ஆயுள் முழுவதும் 
எனக்குள்
இரண்டு  இதயத்தை 
சுமக்கச் சொல்கிறாய் .......?


                 நற்பிட்டிமுனை -ஸமான்