செவ்வாய், 24 டிசம்பர், 2013

பிரதி முதல்வராக சிராஸ் மீராசாகிப்







கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (23.12.2013) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிதி முதல்வருக்கான அலுவலக அறையில் ஒரு  மேசையும் கதிரையும் காணப்பட்டது. பிரதி முதல்வரை சந்திப்பதற்காக வருபவர்கள் அமருவதற்கு கதிரைகள் இல்லாமல் இருந்தது. இதனால் வருகைதந்த  பொதுமக்கள் மற்றும் கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தனர்.

அத்தோடு “பிரதி முதல்வர்” என்ற பெயர்ப்பலகை அவ்வறைக்கு  வெளியில் பொருத்தப்படாமல் அவ்வறையின் மூலை ஒன்றில் கணப்பட்டது. அதுமாத்திரமன்றி அலுவலக பணிக்கான கனணி, கனணி  மேசை மற்றும் கதிரை, பிரின்டர், ஸ்கேனர் போன்ற பல  பொருட்களை அங்கு காணப்படவில்லை. பிரதி முதல்வருக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது முதல்வரின் அறிக்கையாக மாத்திரமே காணப்பட்டது.

“கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருக்கான வசதி வாய்ப்புக்களில் மாநகர சபையின் முதல்வர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது அபாண்டமானதாகும் எனவும் கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வருக்குரிய சகல வசதிகளும் வழங்கப்பட்டும்  அதனை இன்னும் உத்தியோகபூர்வமாக வந்து பொறுப்பெடுக்காமல் என் மீது வீண் பழி சுமத்தி ஊடகங்களுக்கு செய்தி வழங்கும் செயலானது அநாகரிகமானதாகும் எனவும் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கவலை தெரிவித்துள்ளதாக” செய்திகள் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வர் பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் மாநகர ஊழியர்களை சந்தித்து அவர்கள் தான் முதல்வராக செயற்பட்ட காலப்பகுதியில் உதவி ஒத்தாசை புரிந்தமைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து கைலாகு கொடுத்தார்.




x

கருத்துகள் இல்லை: