வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெஹிவள பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றில் ஹரீஸ் எம்.பி வேண்டுகோள்






தெஹிவள, கடவத்த பள்ளிவாசல்கள் நள்ளிரவு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டத்தின் பொதுநிர்வாக அமைச்சின் குழு நிலை விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டிலுள்ள மூவின மக்களும் யுத்தத்திற்கு பின்னராக சூழ்நிலையில் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்ற நிலையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையிட்டு அரசாங்கம் கூடுதல் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரினதும் அமைச்சர்களினதும் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் தொடர்தேச்சியாக நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதனால் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளதுடன் ஆவேசத்துடனும் உள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பள்ளிவாசல் மீதான தாக்குதலினை மக்கள் பிரதிநிதிகளான எங்களால் இனிமேலும் பார்;த்துக் கொண்டிருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உரத்த தொனியில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதற்கு அரசாங்கம் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை: