வெள்ளி, 1 நவம்பர், 2013


widgeo.net

கல்முனை மேயராக இன்றிலிருந்து சிராஸ் மீராசாஹிப் செயற்பட முடியாது

 


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 

கல்முனை மேயர் பதியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் இந்த இராஜினாமாவிற்கான காலக்கெடு நேற்று வியாழக்கிழமையுடன் முடிவடைகின்றது. எனினும் இதுவரை சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லை.

'இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது. இதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கமாட்டாது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். அவ்வாறு வழங்குவார்களாயின் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை: